கஞ்சா வழக்கில் முன்ஜாமின் சங்கத்திற்கு: ரூ.10 ஆயிரம் உதவி உயர்நீதிமன்றம் நிபந்தனை
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி ஜெகதீஷ். இவர் உட்பட சிலர் 1.700 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்ததாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர். ஜெகதீஷ்,'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி விசாரித்தார்.
நீதிபதி: மனுதாரருக்கு எதிராக வேறு வழக்கு எதுவும் இல்லை. சூழ்நிலை கருதி முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் ரூ.10 ஆயிரத்தை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களுக்கான எழுத்தர்கள் நல சங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
அதற்குரிய ரசீது மற்றும் ஜாமின் உத்தரவாத பத்திரத்தை மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உசிலம்பட்டி தாலுகா போலீசில் 4 வாரங்கள் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நிபந்தனை விதித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!