ADVERTISEMENT
பிரான்ஸில் 76வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடக்கிறது. இந்தியா சார்பில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலிகான், ஊர்வசி ரவுட்டேலா, மவுனி ராய், மனுஷி சில்லர் மற்றும் மிருணாள் தாக்கூர் உட்பட பலரும் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் உற்சாக நடைபோட்டனர். நேற்று, சிவப்பு கம்பளத்தின் மீது அதிதி ராவ் ஹைதாரி முதன்முதலில் தோன்றினார்.

L'Ete Dernier (கடந்த கோடைக்காலம்) படம் திரையிடப்பட்டபோது, ஜொலிக்கும் பிரகாசமான மஞ்சள் நிற ஃபுல் ஸ்ட்ராப்லெஸ் ரஃஃபிள் கவுனில் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டார் அதிதி. பிரபல பேஷன் டிசைனர் மைக்கேல் சின்கோ இந்த உடையை வடிவமைத்துள்ளார். காதுகளில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தோடுகள், அழகிய மோதிரம் மட்டும் அணிந்த நிலையில், விரித்த கூந்தல், அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் என மினிமல் லுக்கில் மாடர்ன் இளவரசியை போன்று அசத்தினார் அதிதி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!