கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், ஏப்., 28ல் முடிந்து, ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 1ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதாவது, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதியும்; ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் தரப்பில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
பள்ளிகள் திறந்தால் எதிர்கால சமுதாயத்தில் அறிவு வளரும் அப்ப மதத்தை, அறியாமையை வைத்து அரசியல் பண்ணமுடியாது எனவே சம்பந்தட்ட கட்சிகள் பள்ளி திறப்புக்கு எதிரா போராடனும்
பள்ளிகள் திறப்பதற்கு முன்பு, பள்ளிக்கட்டிடங்கள் சரியாக இருக்கின்றனவா, பள்ளிகளில் போதிய குடிநீர் வசதி, போதிய டாய்லெட் வசதி எல்லாம் இருக்கின்றதா என்று சரிபார்த்து, அப்படி வசதிகள் இல்லாத பள்ளிகளை சீர்செய்து மாணவர்களை உள்ளே அனுமதிப்பது சிறந்தது. பள்ளிகள் திறந்தபின் மேல்கூரை விழுவதும், மாணவர்கள் டாய்லெட் போக ஒதுங்க இடம் இல்லாமல் சிரமப்படுவதும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் கோடை விடுமுறை திருவிழா, இன்ப சுற்றுலாவிற்கு நேரம் போத வில்லை என்பதால் மேலும் ஒரு வாரம் லீவு .... என்ஜோய் பண்ணுங்க ... அவங்க வோட்டு வேணும்ல - திராவிட அரசு கேட்ட தரும் - இருக்கவே இருக்கு ஒரு காரணம் - வெயில் ரொம்பண்ணு ...
அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர், திருச்சியின் கட்ட பஞ்சாயத்து மகான் அன்பில் மாதேசு சாரி மகேசு பொய் மொழி பள்ளி கல்வித்துறை மந்திரி. விளங்கிடும் டுமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம்.
அய்யா மகாபிரபு...மறுபடியும் வந்துட்டீங்களா...புளித்து போன அதே வசனத்துடன்?
பள்ளிகள் திறப்பு, விடுமுறை குறித்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை தேவை இல்லை...... இது போன்ற விஷயங்களில் அரசு முடிவு எடுப்பது நல்லது