Load Image
Advertisement

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Vaara Rasibalan 12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்
ADVERTISEMENT

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (26.5.2023 முதல் 1.6.2023 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்





சுக்கிரன்,சனி நன்மைகளை வழங்குவர். ஆலங்குடி குரு பகவானை மனதில் வேண்டி செயல்பட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி : உங்கள் எண்ணம் ஈடேறும் வாரம் இது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு வாய்ப்புண்டாகும். வரவு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

பரணி : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். செயல்களில் அனுகூலம் தோன்றும். அரசு வழியிலான முயற்சி பலிதமாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணவரவில் இருந்து வந்த தடை அகலும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.



ரிஷபம்





சுக்கிரன், செவ்வாய், கேது நன்மைகளை வழங்குவர். சூரிய வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கார்த்திகை 2, 3, 4: நினைத்ததை சாதிப்பீர். எதிர்காலம் குறித்த செயல்களில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்.

ரோகிணி: சந்திர பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். திங்கள் முதல் பொறுப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். செலவுக்கேற்ற வரவுகள் வரும். முயற்சி லாபமாகும்.


மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு நிறைவேறும் வாரம் இது. குடும்பத்திற்காக சுபச்செலவு ஏற்படும் என்றாலும் அதற்கேற்ற வரவுகளும் வரும். விலகிச்சென்ற உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார். திட்டமிட்டு செயல்பட்ட தொழிலில் முன்னேற்றம் காண்பீர்.



மிதுனம்





குரு, ராகு, புதன், சுக்கிரன், சனி நன்மையை வழங்குவர். உலகளந்த பெருமாளை மனதில் எண்ணி வழிபட வளமுண்டாகும்.


மிருகசீரிடம் 3, 4: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். செயல்கள் லாபமாகும். வாழ்க்கையில் உங்கள் மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். செயலில் வேகம் தோன்றும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.

திருவாதிரை : உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் வாரம் இது. செலவு கட்டுக்குள் அடங்கும். செயல்கள் லாபமாகும். உங்கள் நீண்ட நாள் எண்ணமும் புதிய சொத்து வாங்கும் முயற்சியும் நிறைவேறும்.

புனர்பூசம் 1, 2, 3: லாபஸ்தான ராகு, குருவால் செயல்களில் வேகமும் வருவாயும் அதிகரிக்கும். பிற மனிதர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பிற்குரிய தகவல் வரும். பாக்கிய சனியால் முயற்சி வெற்றியாகும்.


கடகம்





புதன், சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவார்கள். சந்திர பகவானை மனதில் எண்ணி செயல்பட சங்கடம் தீரும்.

புனர்பூசம் 4: வாரத்தின் தொடக்கமே உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள். வருமானத்திற்குரிய வழி தெரியும்.

பூசம் : வேலை வாய்ப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி அனுகூலமாகும். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர். பூர்வீக சொத்துகளில் உண்டான பிரச்னை விலகும்.

ஆயில்யம் : வாரத் தொடக்கத்தில் செயல் இழுபறியானாலும் திங்கள் முதல் திருப்பம் உண்டாகும். வரவுகள் வரத் தொடங்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.



சிம்மம்





கேது, குரு, சூரியன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நவகிரக வழிபாடு உங்கள் நிலையை உயர்த்தும்.

மகம் : வாரத்தின் முற்பகுதியில் செலவு அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும். திங்கள் முதல் தடை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். புதன்,வியாழன் அன்று பொருளாதார நிலை உயரும்.

பூரம் : முதல் மூன்று நாட்கள் அலைச்சல், செலவு என சென்றாலும் அதன்பின் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சி லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திரம் 1 : வாரத்தின் முற்பகுதியில் செலவு அதிகரிக்கும். திங்கள், செவ்வாய் அன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபம்தரும். புதன்,வியாழன் அன்று வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.



கன்னி





சனி, புதன், செவ்வாய் உங்கள் நிலையை உயர்த்துவர். சனி பகவானை வழிபட சங்கடம் தீரும்.

உத்திரம் 2, 3, 4 : ஞாயிறு வரை செலவு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் முன்னே ற்றம் உண்டு. திங்கள் முதல் வியாபாரம்,தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டு் லாபம் காண்பீர். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும்.

அஸ்தம் : வாரத்தின் முற்பகுதியில் உங்கள் முயற்சி இழுபறியாகும். அதன்பின் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சித்திரை 1, 2 : வாரத்தின் முதல் மூன்று நாட்களும் நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். திங்கள் முதல் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். தொழிலில் உங்கள் அணுகுமுறையால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.



துலாம்





குரு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

சித்திரை 3, 4: குரு பலத்தால் தடை விலகும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய செயல் வெற்றியாகும். வியாபாரம்,தொழில் நிலையில் லாபம் அதிகரிக்கும். திங்கள்,செவ்வாய் அன்று செலவுகளில் கவனம் தேவை.

சுவாதி: குரு பகவானும் சுக்கிரனும் உங்கள் சங்கடத்தை போக்குவர். தொழிலை மாற்றம் செய்வீர். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். எதிர்பார்த்த வருமானம் வரும். அந்நியரால் தொழிலில் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்.

விசாகம் 1, 2, 3: நெருக்கடி விலகும் வாரம் இது. வாரத்தின் முதல் மூன்று நாட்களும் முன்னேற்றமான நிலை உண்டாகும். திங்கள் செவ்வாய் அன்று எதிர்பாராத செலவு உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.



விருச்சிகம்





புதன், ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். திருநள்ளாறு சனி பகவானை மனதில் எண்ணி வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

விசாகம் 4: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்ட செயல் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். எதிரிகள் விலகிச்செல்வர். அதிரடி திருப்பம் உண்டாகும்.

அனுஷம் : சங்கடம் விலகி நன்மைகள் காணும் வாரம் இது. வாரத்தின் தொடக்கமே உங்களுக்கு லாபத்தை தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி உங்களுக்கு சாதகமாகும். லாபம் அதிகரிக்கும்.

கேட்டை : தடைகள் தாமதம் என்றிருந்த நிலை மாறி திட்டமிட்ட செயல் நடந்தேறும் வாரமாக இந்த வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகளுக்கு வழியுண்டாகும். ஒரு சிலருக்கு திருமணயோகம் கூடி வரும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும்.



தனுசு





சனி, குரு, சூரியன், கேது நன்மைகளை வழங்குவர். காளத்தீஸ்வரரை வழிபட தடை விலகும்.

மூலம் : நெருக்கடி நீங்கி எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சி ஆதாயம் தரும். நிறைவேறாமல் இருந்த செயல் நிறைவேறும். அரசு வழியில் அதிர்ஷ்டம் வரவேற்கும். தொழிலில் உங்கள் அணுகுமுறைகள் கூடுதல் லாபத்தை ஏற்படுத்தும்.

பூராடம்: வாரத்தின் முதல் நாளில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். தடைகளும் நெருக்கடியும் நீங்கும். ஆறாமிட சூரியனால் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்.

உத்திராடம் 1: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்கள் இழுபறியாகும். ஞாயிறு முதல் எதிர்பார்த்த பணம் வரும். முயற்சிகள் லாபமாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.



சந்திராஷ்டமம்

24.5.2023 காலை 8:52 மணி - 26.5.2023 இரவு 8:30 மணி






மகரம்





புதன் நன்மைகளை வழங்குவார். வராகியை வழிபட வளமுண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4: சனிக்கிழமை எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். ஞாயிறு முதல் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். முயற்சிக்கேற்ற லாபம் காண்பீர்கள்.

திருவோணம்: வாரத்தின் முதல் நாளில் உங்கள் செயல்களில் லாபநிலை உண்டாகும். சனி, ஞாயிறு அன்று முயற்சி இழுபறியாகும். திங்கள் முதல் வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

அவிட்டம் 1, 2 : அரசு வழியிலான முயற்சி கடும் முயற்சிக்குப்பின் ஆதாயமாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். தொழிலில் உண்டான மந்த நிலை அகலும். ஞாயிறு முதல் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வு அவசியம்.



சந்திராஷ்டமம்

26.5.2023 இரவு 8:31 மணி - 29.5.2023 காலை 7:43 மணி.





கும்பம்





ராகு, சுக்கிரன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நெல்லையப்பரை மனதில் எண்ணி வழிபட நலமுண்டாகும்.

அவிட்டம் 3, 4: வெள்ளி,சனி அன்று செயல் சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஞாயிறு அன்று நெருக்கடி அதிகரிக்கும். திங்கள் முதல் துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.

சதயம்: முதல் மூன்று நாட்களும் குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சிகளில் கவனம் செல்லும். திங்கள் அன்று சந்திராஷ்டமம் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நன்மை தரும்.

பூரட்டாதி 1, 2, 3: மூன்றாமிட ராகு, ஆறாமிட செவ்வாயால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் என்றாலும் செயல்களில் கவனமும் நிதானமும் அவசியம். புதிய சொத்து வாங்கும் போது வில்லங்கம் பாருங்கள். அடுத்தவரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபடாதீர். செவ்வாய்க்கிழமை சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள்.



சந்திராஷ்டமம்

29.5.2023 காலை 7:44 மணி - 31.5.2023 மாலை 5:05 மணி .





மீனம்





குரு, புதன், சூரியன், சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். சக்தி வழிபாடு சங்கடம் போக்கும்.

பூரட்டாதி 4 : முதல் மூன்று நாட்களும் உங்கள் முயற்சி வெற்றி பெறும். செவ்வாய் அன்று பொறுப்புகள் அதிகரிக்கும் வேலை பளுகூடும். பிள்ளைகள் வழியே சில சங்கடம் உண்டாகும். புதன் அன்று முதல் செயல்களில் லாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : தன ஸ்தான குருவும், மூன்றாமிட சூரியனும் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவார்கள். செயல்களை லாபமாக்குவார்கள். புதன் கிழமை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படுங்கள். வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

ரேவதி : உங்கள் முயற்சி வெற்றியாகும் வாரம் இது. தடைபட்டிருந்த செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நினைத்தவற்றில் வெற்றி காண்பீர்கள். வியாழன் அன்று விழிப்புணர்வு அவசியம்.



சந்திராஷ்டமம்

31.5.2023 மாலை 5:06 மணி - 2.6.2023 இரவு 12:00 மணி



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement