அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் ( அதிமுக ஆட்சிகாலத்தில்) வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று(மே 26) ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
பொள்ளாச்சியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர் கல்குவாரி மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள அவரது ஆதரவாளர் ஒருவரது போதை மீட்பு சிகிச்சை மையத்திலும் ரெய்டு நடக்கிறது. இந்த மையத்தை செந்தில்பாலாஜிதான் திறந்து வைத்தார்.
கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பரான கார்த்தி என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் தி.மு.க.,வினர் வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கரூரில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முற்பட்ட போது அதிகாாிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிகாரிகள் வந்த காரினை திமுகவினர் சேதப்படுத்தினர். அதிகாரிகள் மீதும் தி.மு.க., வினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு வருமான வரித்துறையினர் எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால், 10 இடங்களில் சோதனை நடத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மருத்துவமனையில் நான்கு அதிகாரிகள்
வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் காயத்ரி, அதிகாரிகள் சுனில் குமார், பங்கஜ்குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய நான்கு பேரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று மதியம் சேர்ந்தனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் காயத்ரி தாக்கியதாக கூறி, தி.மு.க., தொண்டர் குமார், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவரது வீடு கரூர் ராமகிருஷ்ணபுரம் இரண்டாவது தெருவில் உள்ளது. இங்கு வருமான வரிதுறையினர் சோதனை நடத்த வந்தபோது அமைச்சரின் ஆதரவாளர்கள் பலர் குவிந்ததனர். பெண் அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டனர். ஐ.டி., கார்டை காட்டுங்கள் என ஆவேசமாக பேசினர். இப்போது பெண் அதிகாரி காரசாரமாக விவாதம் செய்தார். இந்நேரத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலரும் அதிகாரிகளை வெளியேறுங்கள் என குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. உரிய போலீசார் பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் எனது வீடு மற்றும் அலுவலகங்களில் எவ்வித சோதனையும் நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். காலையில் அவரது வீட்டில் ரெய்டு நடப்பதாக செய்தி பரவியது. ஆனால் செந்தில் பாலாஜி இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் ; எனது தம்பி மற்றும் நண்பர்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறது. நான் செய்தியாளர்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (111 + 37)
பகுத்தறிவு பகலவன் பள்ளிக்கூடத்தில் படிசீங்களா
தமிழகத்தில் ஜனநாயகம் கேளி கூத்தாகிறது இப்படி இருக்க முதல்வர் அமைதி பூங்கா என்பதய் எதைய்ய வைத்து கூறுகிறார் ?????
மூன்று வேலையும் விருந்துக்கு எந்த கேட்டரிங் குக்கு ஆர்டர் ,கொடுத்திருக்கிறார்கள்?
பிவிசி பைப்பில் மணலை நிரப்பி இந்த திருட்டுதிமுக கும்பலை அடி வெளுத்தால் நன்றாக இருக்கும் ..ரத்தம் வராது ...ஆனால் அங்கங்கே ரத்தம் கட்டி ஆண்டுக்கணக்கில் வலி உயிர்போகும் ..இதுகளை அடிக்கும் அடியில் , நரகத்தில் இருக்கும் கட்டுமரத்துக்கு வலிக்கவேண்டும் ......
மூவாயிரம் ஸ்டார் கொடுக்கலாம் இந்த அருமையான கருத்துக்கு .
விஷயத்தை எதிர்பார்த்ததுதான் பெரிய பட்சி பறந்துவிட்டது
பெரிய குருவியை கழுகு புடிக்கணும் ன்னு நினைச்சா புடிக்க முடியாதா ????
ரெய்டு குறித்து முறையான தகவல் இல்லை: கரூர் எஸ்.பி., (35)
வருமான வரி சோதனையை எப்படி முன்னரே தெரிவிக்க முடியும். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சாதகமா பேசறார்.
எல்ல கட்சிகளுக்கும் இந்த முரண் பாடு உண்டு. ஆனால் இந்த தீ மு க்கா ஆட்சிக்கு வந்தாளெ மிக்க கேராளமமைகிறது இந்த துறைய்ய தான். போலீசு இப்படி அடிமைய்யகள் போலாகி விடுகிறார்கள் . அவர்கள் மக்கள் பணமான அரசு சம்பளத்தில் வேலை செய்வதை மறந்து ஆட்சி ஆளர் கள் கை பாவையாகா யாவது வேதனை அளிக்கிறது
ரெய்டு என்னகல்யாணமா..? முன்கூட்டியே தகவல் தருவதற்கு?
எப்படி, நீங்க சாராய ரெய்ட் போற மாதிரியா
இது வரைக்கும் எத்தனையோ அரசியல்வாதிகளின் வீடுகள், பங்களாக்கள், தொழில் நடைபெறும் இடங்கள், பினாமிகளின் இடங்களில் வருமான வாித்துறையினா் சோதனை நடத்தி உள்ளனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு அரசியல் நாடகம்.
இப்பொழுது எல்லாம் காவல்துறைக்கும் களவாளிகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை ....
Law and order possible only on prior intimation
தாக்குதல் அல்ல இது தேடுதல் .நிருபர் சரியாக போட்டாரா ?இல்லை எழுத்து பிழையா ?.
தமிழக போலீச மதிக்கலனு அர்த்தம்
திடீரென சொல்லாமல் வருவது தான் ரெயிட்
பிழைக்கத்தெரிந்தவர். வாழ்த்துக்கள்.
உங்களிடம் எப்படி முன் கூடி சொல்ல முடியும் . காக்கி சட்டை போட்ட தி மு க காரர் தானே நீங்க. தகவல் வந்த உடனே மாவட்ட மன்னருக்கும் இளவரசருக்கு சொல்லி விட மாட்டீர்களா. அதற்கு தானே உங்களை அங்கே வெச்சிருக்காங்க .
Okay Sir. We could not allert the concerned
போலீசுக்கு தெரியாது , தொண்டனுக்கு உடனே தெரியுது . அவ்வ்ளோ தான் போலீஸ் திறமை . வேலையை விட்டு அறிவாலயத்துல காவல்காரனா சேந்துடு
அங்கே போராட்டம் நடத்திய தீமுக கட்சி தொண்டர்களுக்கு தெரிந்த IT சோதனை பற்றிய செய்தி அளவுக்கு கூட போலீஸ் அதிகாரிகளுக்கு தெறியவில்லையோ பாவம் என்ன ஒரு நம்பகத்தன்மையான செய்தி
ஓகே சார்.
சொல்லிவிட்டு வந்தால் அவங்களையே ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் வைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் தான். கரூர் கம்பெனிக்கு எல்லா இடங்களிலும் ஆட்கள் உண்டு.
உங்க ஊர் அமைச்சர். மணல் அள்ள 11.05. என்று நேரம் குறிபிட்டது போல் நேரம் குறிப்பிடபடவில்லை என வருத்தப் படுகிறீர்களோ அது போக தாக்குதல் நடக்கப் போகிறது என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள். நல்லா வருவீங்க வாழ்த்துக்கள்
எங்கப்பன் குதூருக்குள்ளே யில்லை மாதிரி ஆகி விடும்.
ரெயிடு பண்ணுறவங்களை மொத்துறதுக்கு கட்சி ஆளுங்க வர்றாங்களே ...... அவங்களுக்கு எப்படி பாஸ் டக் டக் ன்னு தகவல் போச்சு ????
சொல்வதற்கு ஒன்றும் இல்லை
அறிவிப்பு இல்லாமல் வந்தது தற்போதைய தமிழக போலீஸ் மீது நம்பகத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.
அறிவிப்பு இல்லாம வந்து செய்வதற்கு பெயர் தான் ரைடு. சொல்லிட்டு வந்தா உங்க விசுவாசத்தை காட்டிடுவீங்களே, அதனால தான்.
கேடு கேட்ட கைத்தடியாகிவிட்டது போலீஸ் துறை திமுகவின் எடுபிடி கேவலம் ஏவல்துறை அரசு அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுத்ததற்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் கைதுசெய்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
kedu
இதுக்குத்தான் தனி தமிழ் தேசியம் அமையுனுங்குறது அப்ப வருமானவரி ரைடு நடக்காது
முன்கூட்டியே தகவல் கொடுக்க உன் நம்பிக்கை இல்லாத காரணமாக இருக்கலாம். கைக்கூலியாக இருந்திருந்தால்.....எந்த புற்றில் எந்த பாம்புளள்ளது......
அப்படி தகவல் தெரிவித்தால், பாலுக்கு பூனையை காவல் வைத்து போலாகிவிடும்...
ரெய்டு நடந்ததுன்னு அறிக்கைவிட்டா, எஸ்.பி நாளையே சஸ்பெண்ட் ஆயிடுவாரு பாவம். ராணுவத்தை வரவைத்து தான் இனி தமிழகத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தமுடியும்.
ஏன் புகார் அளிக்கவில்லை என்றால், உலகத்துக்கயே தெரியும் ஆனால் இன்னும் உங்களுக்கு யாராவது புகார் கொடுத்தால் தான் நடவெடிக்கை என்றால், என்ன சொல்லுவது . எவனாவது கொலை செய்துவிட்டு யாரும் புகார் தரவில்லை என்றால் விட்டு விடுவீர்களா ? , கொஞ்சம் நியாயமாகவும் நடக்கலாம் தப்பில்லை
திடீர்னு பண்ணிணா அதன் பேரு ரெய்டு.சொல்லிட்டு பண்ணிணா அது கண்துடைப்பு.
இது தமிழக காவல் துறைக்கு கேவலம்... தங்கள் மீது நம்பிக்கையிமையை இது காட்டுகிறது.. தங்களிடம் சொன்னால் போட்டு கொடுப்பீர்கள் என்பது தெளிவாக அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது ...
கைது செய்ய வேண்டியது யாரை என்று எங்களுக்கு தெரியும். இறைவனுக்குத் தெரியும்.
ஏன், தி மு க கரண்ட போட்டுகுடுக்கவா
சூப்பர் போலீஸ், உபிஸ் கேஸ் குடுத்தா ED அரேஸ்ட் செய்ய படும் என பெரிய போலீஸ் அறிக்கை
செந்தில்பாலாஜியை அரசியல் ரீதியாக ஜெயிக்க முடியாத பாஜ.,. வருமான வரித்துறை நேர்மையாக இல்லை என்பது உண்மை மாற்று கருத்து இல்லை