அலர்ட்டாக லஞ்சம் வாங்கிய அதிகாரி: அலேக்காக தூக்கிய போலீஸ்!
கோவை, வடவள்ளி, நவாவூரைச் சேர்ந்தவர் துரைசாமி, 78. அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லாலிரோட்டிலுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார்; கடை லைசன்ஸ் காலாவதியாகி இருந்தது.

லைசன்சை புதுப்பித்து தர 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வெங்கடேஷ் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி, 7 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். 'லஞ்சம் தராமல் வேலை ஆகாது' என்ற நிலையில் மனம் வெறுத்த துரைசாமி, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை துரைசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.
நேரடியாக லஞ்சம் வாங்கினால் சிக்கிக்கொள்வோம் என்ற முன்னெச்சரிக்கையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ், புரோக்கர் பிரதாப் என்பவரை வாங்கச் சொன்னார். அந்த நபர், அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேக்கரிக்கு வருமாறு அழைத்து லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கரை கைது செய்தனர்; உணவுப்பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசும் கைது செய்யப்பட்டார்.
தொடருமா கைது?
கோவையிலுள்ள அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. 'லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுத்துத்தான் இப்பொறுப்புக்கு வந்திருக்கிறோம்' எனக்கூறும் அதிகாரிகள், பொதுமக்களிடம் வழிப்பறி செய்யாத குறையாக 'ரேட்' நிர்ணயித்து லஞ்சம் பறிக்கின்றனர்.
ஆனாலும், லஞ்சப் பேர்வழிகள் மீதான கைது நடவடிக்கை பெயரளவுக்கு கூடஇல்லாமல் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் சமீபத்தில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது.
இதன்எதிரொலியாக சுறுசுறுப்படைந்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். உணவுப் பாதுகாப்பு அலுவலர், புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும்; போலீஸ், பத்திரப்பதிவு, வணிகவரி, மின்வாரியம், மாநகராட்சி என, பல்துறைகளின் மீதும் பாயவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும்; நடக்குமா என பார்ப்போம்.
வாசகர் கருத்து (29)
லஞ்சம் எப்படி வாங்குவது? தெரிந்துகொள்ள வேண்டும்
இந்தியன் சினிமாவில் மனோரம்மா மண்ணை அள்ளி விசி சாபம் விடுவார்.அது உண்மையாக நடந்தால் கூட இவர்கள் திருந்த மாட்டார்கள்.
அச்சம் என்பது லஞ்சம் வாங்குவது திராவிட உரிமை
அதிகாரிக்கு சாமர்த்தியமாக லஞ்சம் வாங்க தெரியவில்லை. ஹூ ஹூம். அவருக்கு ட்ரைனிங் கொடுக்கவேண்டும் மீண்டும். அனுப்புங்கள் அவரை கோபாலபுரம் வீட்டிற்கு.
அவ்ளோதூரமெல்லாம் எதுக்கு பொய் கஷ்டப்படணும், முதல்வர் குடும்பத்தை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து கொழிக்கும் சாராய அமைச்சன் அருகிலேயே இருக்க வரை ஏன் சொல்லணும்..?
வருவாய் துறை , பத்திரப்பதிவு துறை போக்குவது துறை மற்றும் அரச சான்ற துறைகள் அனைத்துமே லஞ்சத்தில் ஊறுகின்றது.. இத்துறைகளில் உள்ள அலுவலர்கள் அனைவரயும் வருடாவருடம் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினக்ள் சொத்து விபரங்களை ( அசையும் அசையா ) ஒப்புவிக்க வேண்டும். அதில் சேர்க்கை இருந்தால் அந்த விபத்தையும் தெரிவிக்கவேண்டும் . இதில் முரண்பாடு இருந்தால் சம்பந்த pattavarkali உடனடியாக பதவி நீக்கம் seiyavendum