சென்னை: இன்று(மே 26) 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, பல்வேறு நெருக்கடிகள், சர்ச்சைகளை தாண்டி சாதனைகளை படைத்துள்ளது.
கடந்த 2014 மே 26-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., அரசு பொறுப்பேற்றது. 30 ஆண்டுகள் பெரும் இடைவெளிக்கு பின், தனிப்பெரும்பான்மையுடன் அமைந்த அரசு என்பதால், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
குஜராத் கலவரத்தை காரணம் காட்டி, அம்மாநிலமுதல்வராக இருந்த மோடிக்கு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள்,'விசா' வழங்க மறுத்தன. இதனால், உலக நாடுகளுடன் உறவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பினர்.
ஆனால், 'இதுவரை இல்லாத அளவுக்கு உலக நாடுகள் உடனான நல்லுறவை மோடி திறம்பட கையாண்டுள்ளார்' என்று, சர்வதேச ஊடகங்கள் பாராட்டுகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது, முஸ்லிம்நாடுகளின் தலைவர்களுடன் மோடி ஏற்படுத்தியமிக நெருங்கிய நட்பு, இந்தியாவுக்கு பல நன்மைகளை தேடித் தந்திருக்கிறது.
மோடியை 'தி பாஸ்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டும் அளவுக்கு, உலக தலைவராக உயர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் 12 ஆதி திராவிடர்கள், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களை சேர்த்து, சமூக நீதி அரசியலை மோடி எதிர்கொண்டது, எதிர்க்கட்சிகளை திகைக்க வைத்தது.
கடந்த 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி எடுத்தபோது, பா.ஜ., அரசு மிகக் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. மோடி அரசின் கதை முடிந்து விட்டதாக, எதிர்க்கட்சிகள் மகிழ்ந்தன.
ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் நடந்த உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் வென்றதன் வாயிலாக, எந்தவொரு கடினமான முடிவாக இருந்தாலும், துணிச்சலாக எடுக்கும் தலைவரை மக்கள் ஏற்பர் என்பதை மோடி நிரூபித்தார். அந்த வெற்றி, 2019 லோக்சபா தேர்தலிலும் தொடர்ந்தது.

கொரோனா பேரிடரின்போது, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலை என்னவாக போகிறதோ என, உலகமே கவலைப்பட்டது. 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை, குறுகிய காலத்தில் செலுத்தி, மக்களை பாதுகாத்தது.
தடுப்பூசி தயாரிக்க முடியாத பல நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசிகளை, இந்தியா வழங்கியது. சில நாட்களுக்கு முன்பு, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு, பிரதமர் மோடி சென்றபோது, அவரது காலில் விழுந்து, அந்நாட்டின் பிரதமர் ஆசி பெற்றார்.
இது தடுப்பூசி வழங்கியதற்காக, அவர் செலுத்திய நன்றியின் வெளிப்பாடு என்கின்றனர்.
42 கோடி புதிய வங்கி கணக்குகள், அனைவருக்கும் வீடு, குடிநீர், காஸ் இணைப்பு திட்டம், மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை, விரைவு சாலைகள், ரயில்வே திட்டங்கள், புதிய விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பு வசதிகளை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசு செயல்படுத்தியுள்ளது.
பல்வேறு சமூக நல திட்டங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களிடம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திஇருக்கின்றன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, விவசாயிகள் போராட்டம், அதானி விவாகாரம் என அவ்வப்போது நெருக்கடிகளை சந்தித்தாலும், எதிர்க்கட்சிகளால், மோடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்த முடியவில்லை.
'மீண்டும் மீண்டும் மதவாத அரசு, மோடி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார், கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறார்' என்றுதான் எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்ட முடிகிறது.
அதனால் தான், ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னும், மோடி அரசை தோற்கடிக்க வழி தெரியாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளும், தி.மு.க., போன்ற மாநில கட்சிகளும் தவித்து நிற்கின்றன.
வாசகர் கருத்து (9)
இதுவரை பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்தது பெரிய சாதனை.
ஊடகங்களை சந்திக்காமல் இருப்பதே நல்லது
மக்கள் மதத்தின் பெயரால் ஒட்டு போடுவதால் மோடி மற்றும் பிஜேபி ஆட்சி அமைத்தது.வெட்கக்கேடு
மதத்தின் பெயரால் ஒட்டு போடுவது காங்கிராசு தானே ...உன் மரமண்டைக்கு ஏறவில்லயா
குடியுரிமை சட்டத்தையும் விவசாய சட்டத்தையும் நிறைவேற்ற முடியாதது பெரும் சறுக்கல் தான். மக்கள் தொகை கணக்கெடுப்பும் தள்ளி போவது ஏனோ?
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிஜி அறுதிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைப்பார் இதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் ஊழல் பெருச்சாளிகளையும் கொள்ளைக் கும்பல்களின் மீதும் போடப்பட்ட CBI வழக்குகள் அனைத்தையும் முடித்து அந்த கூட்டத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு அந்த கூட்டத்தின் சுய உருவம் வெளிப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க இயலும்
மதவாத கட்சி இப்படி சொல்லயே இங்க உள்ள பெறும்பாண்மையான மக்களுக்கான நினைவில் நிற்கும் சிறப்பான திட்டங்கள் இல்லை இது பஜக பற்றாளர்களை தவிர .... அனைவரையும் ஈர்க்கவில்லை