Load Image
Advertisement

சண்டிகரை அதிர வைத்த தமிழக கலைக் குழு

சென்னை--சண்டிகரில் நடக்கும் வைகாசி திருவிழாவில், தமிழகத்தைச் சேர்ந்த கிராமிய கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு சண்டிகர் மக்கள் வியந்தனர்.
Latest Tamil News

யூனியன் பிரதேசமான சண்டிகரில், 4,00க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் சண்டிகர் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு, நேற்று துவங்கி 28ம் தேதி வரை, 'வைகாசி விழா' என்ற பெயரில் கலாசார விழாவை நடத்துகிறது.

விழாவின் துவக்க நாளான நேற்று, பாரதி பவன் பகுதியில் உள்ள 'கார்த்திகேய சுவாமி' எனும் முருகன் கோவில் கும்பாபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தமிழ் பாடல்கள், மந்திரங்கள் ஒலித்தன.

தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து சென்ற நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களின் மங்கல இசையுடன் முருகன் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, சண்டிகரில் உள்ள தமிழ் சிறுவர் - சிறுமியர் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தினர்.
Latest Tamil News
இதை, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஹரியானா கவர்னர் தத்தாத்ரேயா உள்ளிட்ட அரசு சார்ந்தோரும், அம்மாநில மக்களும் கண்டு வியந்து பாராட்டினர். இன்று முதல், மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் விழாக்கள் நடக்க உள்ளன.

இவற்றில், தமிழகத்தில் அங்கு சென்றுள்ள தலைசிறந்த கலைக்குழுவினர் நிகழ்த்தும் நாதஸ்வரம், தவில், காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.


வாசகர் கருத்து (3)

  • அப்புசாமி -

    பஞ்சாபிகள் நல்ல உழைப்பாளிகள். அவிங்களையும் கெடுத்துராதீங்க.

  • ஆக .. - Chennai ,இந்தியா

    பஞ்சாபி பங்கரா நடனத்தை தமிழகத்தில் நடத்தி கலை பரிமாற்றம் செய்ய வேண்டும்

    • sankar - Nellai,இந்தியா

      செய்யலாமே - கெஜ்ரியிடம் சொல்லுங்கள் சார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்