Load Image
Advertisement

திசை திருப்பும் நாடகம் வேண்டாம் முதல்வருக்கு அண்ணாமலை அறிவுரை..

சென்னை-'ஆவின் நிறுவன விவகாரத்தில், திசை திருப்புதல் நாடகத்தில் ஈடுபடுவதை, முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Latest Tamil News

அவரது அறிக்கை:

'தமிழகத்தில் அமுல் நிறுவனம் வருவதை தடுக்க வேண்டும்' என்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம், ஆவின் நிறுவனம் மீதான போலி அக்கறை தான்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, தமிழக பா.ஜ., அம்பலப்படுத்தியது. வேறு வழியின்றி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஆவினிடம் இனிப்பு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதை, முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா?

பாலுாட்டும் பெண்களுக்கான சத்துணவு தொகுப்பு ஏலத்தில், சத்து பால் பவுடர் தயாரிக்க ஆவின் முன்வந்த போதிலும் அதை பரிசீலிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை தி.மு.க., அரசு மறுக்க முடியுமா?

தமிழகத்தில் தினமும், 2.44 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் கொள்முதல் செய்வது, 35 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது, மாநில பால் உற்பத்தியில் வெறும், 14 சதவீதம் மட்டுமே ஆவின் வாங்குகிறது.
Latest Tamil News
மேலும், 2021ல் மே மாதத்திற்கு பின் சராசரி பால் கொள்முதல், 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக புகார்கள் உள்ளன.

ஆவின் நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் சிறிதளவும் ஈடுபடாமல், தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதையே நோக்காமாக கொண்டு முதல்வர் செயல்படுகிறார்.

எனவே, வழக்கமான திசை திருப்புதல் நாடகத்தில் ஈடுபடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (25)

  • duruvasar - indraprastham,இந்தியா

    மடைமாற்றம் என்பது திமுக கம்பனியின் ஆர்டிகில்ஸ் ஆஃப் அஸோஸியேஷனில் முதல் கொள்கையாகவே அசிட்டபட்டிருப்பதை காணலாம்.கம்பனியின் நோக்கத்தையே கேள்வி கேட்கிறீர்களே அய்யா. இது முறையா?.

  • Soumya - Trichy,இந்தியா

    அப்போ பத்து வருஷமா பசியில் வாடிய முதல்வருக்கு யாரு கட்டிங் கமிஷன் எங்கிருந்து வரும்

  • muthu - tirunelveli,இந்தியா

    Let central govt take lease of aavin and pay amount to state govt in order to save aavin workers

  • அப்புசாமி -

    தத்திகள் அதிகமாயிட்டாங்க நாட்டிலே

  • GANESAN S R - chennai,இந்தியா

    மாதம் 3000 ரூபாய் வாடகை கொடுக்கும் பரம ஏழை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்