Load Image
Advertisement

சீரடி விமானம் திடீர் ரத்து பயணியர் போராட்டம்

Passenger protest for sudden cancellation of Sirdi flight     சீரடி விமானம் திடீர் ரத்து பயணியர் போராட்டம்
ADVERTISEMENT
சென்னை-சீரடி செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், 154 பயணியர், சென்னை விமான நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சீரடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணியர் விமானம், நேற்று பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்ல, 154 பேர், ஒரு மணி நேரத்திற்கு முன் வந்து, காத்திருந்தனர்.

ஆனால், விமானம் காலதாமதமாக மாலை 4:00 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், 'சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால், விமான சேவை ரத்து செய்யப்படுகிறது' என, திடீரென அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணியர், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு 7:00 மணிக்கு சென்னையில் இருந்து நாசிக் செல்லும், ஸ்பெஸ் ஜெட் விமானத்தில், அவசரமாக சீரடி செல்லும் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து, 90 கி.மீ.,யில் உள்ள சீரடிக்கு, சாலை மார்க்கத்தில் அழைத்துச் செல்லப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து நேரடியாக சீரடி செல்ல விரும்பும் மற்ற பயணியர், இன்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.


வாசகர் கருத்து (2)

  • Raja - chennai,இந்தியா

    எப்போதும் சீரடியிலிருந்து இருந்து சென்னை வரும் விமானத்தை தான் அடிக்கடி ரத்து செய்வார்கள்.

  • அப்புசாமி -

    பாபா அருள் இருந்தால்தான் போக முடியாது டியும்னு ஷீரடி போறவங்களுக்கு தெரியாதா? எதுக்கு எம்பிக் குதிக்கறாங்க?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement