சூரியசக்தி மின் உற்பத்தி: விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை

அத்திட்டத்தின் கீழ், விவசாயி தனியாக அல்லது பல விவசாயிகள் சேர்ந்து, தங்களின் நிலத்தில் 500 கிலோ வாட் முதல் 2 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம்.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் நிரந்தர வருவாய் கிடைக்கும்.
தமிழகத்தில் பிரதமரின் திட்டத்தின் கீழ், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் விவசாயிகளிடம் இருந்து, யூனிட் அதிகபட்சம், 3.30 ரூபாய் என்ற விலையில், 420 மெகா வாட் வாங்க, பிப்ரவரியில் மின் வாரியம் 'டெண்டர்' கோரியது.
அதில், இரண்டு விவசாயிகள், 3 மெகா வாட்டுக்கு மட்டும் மின் நிலையம் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதை, மின் வாரியம் ஏற்கும்பட்சத்தில், 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.

விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு, கொள்முதல் அடிப்படையிலான ஊக்கத்தொகை என்ற பெயரில், 1 யூனிட்டிற்கு 40 காசு அல்லது 1 மெகா வாட்டிற்கு ஆண்டுக்கு 6.60 லட்சம் ரூபாய் என, இரண்டில் எது குறைவோ, அந்த தொகையை, மின் வாரியத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும்.
பிரதமரின் சூரியசக்தி மின் திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே, கிராம அளவில் கூட்டங்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இத்திட்டத்தில் மின் நிலையம் அமைக்க பலர் முன்வருவர் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து (14)
தமிழ் நாட்டில் 448 Engg College - பொறியியல் கல்லூரி இருக்கு, ஒவ்வொரு கல்லூரி மொட்டை மடியில் சோலார் போட்டால் மிக பெரிய பவர் சேவிங்ஸ் கிடைக்கும்.
விவசாயிகளிடம் மெகா வாட் அமைக்கும் அளவுக்கு பணம் இருந்தால் அவர் எப்படி விவசாயியாக இருப்பர்? தமிழக மின் வாரியத்துக்கு காசு கொடுத்து வாழ முடியாது. சோலார் + ஊடு பயிராக எதாவது போட்டு விவசாயம் செய்தால் நன்றாக இருக்கும். விவசாயி solar MW போட்டு மின் வாரியத்துக்கு கொடுத்தால், விவசாயிடம் அபராத தொகை பிடுங்குவார்கள் , மின் தரம் சரியில்லை என்பார்கள், ஆண்டுக்கு கொடுக்க வேண்டிய மின்சாரம் குறைவாக இருக்கு, மின் காண்ட்ராக்ட் மீறிவிட்டாய் என புடிக்கி தின்பார்கள். மேலும் தமிழக மின்சார துறைக்கு சோலார் பவர் போடுவது பிடிக்க வில்லை. காசு கொடுத்து மாளாது.... விட்டு விடுங்கள் ஐயா.
மத்திய மாநில அரசுகள் ....
மின்சாரம் என்றாலே யோசனையாகதான் இருக்கும்
எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் GreenCo சான்றிதழுக்காக மிகத்தரமான மின் உற்பத்தி நிலையம் அமைத்து விட்டு ஐந்து மாதங்களாக மின்வாரிய அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் பேரம் படிந்தபாடில்லை. எப்போது விடியுமோ?