சொத்தை பறித்து இழப்பீடு கொடுங்க
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'அரசியல் கட்சிகள், 'பந்த்' நடத்தும் போது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். அந்த கட்சிகளிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்திலும், தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய பலிகளுக்கு, அவற்றை காய்ச்சி விற்றவர்களும், அவர்களுக்கு துணை போன போலீசாரும், உயர் அதிகாரிகளும் தானே பொறுப்பு. அதனால், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க, சாராயம் விற்றவர்கள் மற்றும் அவற்றை தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தான், இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும்.
'கள்ளச்சாராயம் விற்போர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்' என, அறிவித்துள்ள தமிழக அரசு, சாராய பலிகளுக்கு யார் காரணமோ, அவர்களிடம் இருந்தே இழப்பீடு வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதோடு, அதற்கான சட்டத்தையும் இயற்ற முன்வந்தால், சட்டவிரோத சாராய விற்பனை தானாக முடிவுக்கு வந்து விடும்.

முடிந்தால், கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களை பறித்து, அவற்றை விற்று, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கலாம்.
மக்களின் வரிப் பணத்தை, அவசியமானவற்றுக்கு மட்டுமே செலவிட வேண்டும். 'அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்பது போல, வேண்டுமென்றே தப்பு செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வாரி வழங்குவது சரியான அணுகுமுறையல்ல. நிதிப் பற்றாக்குறையில் மாநிலம் தவிக்கும் நிலையில், தேவையற்ற நிவாரணங்களை தவிர்ப்பதே நல்லது.
வாசகர் கருத்து (19)
இதுக்கு முன்னே இருந்த ஆட்சியர்கள் என்ன செய்தார்கள்... இப்ப மட்டும் கேட்க கேவலமா இல்ல?
ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேல் பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளை வளைத்து பிடிக்க முடிகிறது என்றால், காவல்துறைக்கு தெரிந்திருந்தும் தடுக்க வில்லை என்பதுதானே பொருள். காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடக்க வில்லை. இதிலிருந்து கடைமட்டம் முதல் தலைமட்டம் வரை பங்கு போயிருப்பது புலனாகிறது.
என்னது, சொத்தை பறித்து இழப்பீடு கொடுப்பதா? சொத்தை வேண்டுமானால் பறித்துக்கொள்வோம், இழப்பீடு நயாபைசா கிடையாது, இது கள்ளச்சாராய மாடல்.......
ஆம், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நிவாரணம் கொடுக்கப்படவேண்டும். எக்காரணத்தை கொண்டும், மக்கள் வரிப்பணத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நிவாரணம் கொடுக்க கூடாது. யாரோ ஒரு சில அயோக்கியர்கள் செய்யும் தவறுக்கு, மக்களின் வரிப்பணம் ஏன் செலவழிக்கப்படவேண்டும்?
ஓரே ஒரு சிறிய சட்டம் இப்படி இருக்கவேண்டும் 1)நாட்டு மக்களின் வரிப்பணம் எந்த காரணத்தைக்கொண்டும் இலவசமாக எவருக்கும் எந்த ஒரு அரசும் கொடுக்கக்கூடாது. தங்கள் / தங்கள் கட்சி சம்பாத்தியத்திலிருந்து மட்டும் தான் எல்லா இலவசமும் தனி மனிதர்களுக்கு செல்லவேண்டும். இந்த சட்டம் மட்டும் நடைமுறை படுத்தப்பட்டால் ஒரு கம்மினாட்டி அரசியல்வாதி கூட கனவில் கூட இதை பற்றி பேசவே ஏன் நினைத்துக்கூட பார்க்க மாட்டான்