தமிழில் படித்தவர்களை புறக்கணிக்கும் கேரளா..
மூணாறு--கேரளாவில் தமிழ்வழி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளாவில், இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர்.
இதற்கிடையே, ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வை, கேரள அரசு 2012ல் அறிமுகம் செய்தது. இது, நான்கு பிரிவுகளில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், கேள்வித் தாள்கள் ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதால், தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதினாலும் வெற்றி பெற இயலாத சூழல் நிலவுகிறது. இதனால், ஏராளமானோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு மே 30ல் நடக்கிறது. தேர்வு எழுதினாலும் பலனில்லை என்பதால் தமிழ்வழி கல்வி பயின்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
'இப்பிரச்னைக்கு தீர்வு காண, கேரள முதல்வர்பினராயி விஜயனுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்த வேண்டும்' என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து (14)
எல்லைய தாண்டுனாலே இந்தமாதிரி பிரச்னைதான்..
அவர் ஜப்பானிலிருந்து தொலைப்பேசி மூலமாக பினராயி விஜயனோடு மலையாலத்தில் பேசிவிட்டார் அவர் திரும்ப வருமுன் மழையால பட்டியலை வெளியிடுமாறு ஓங்கோல் அரசர் கூறிவிட்டாராம்
இது தெரிந்ததால் தானே நம் முதல்வர் அங்கு சென்று மலையாளத்தில் உரையாடினார். கேரளாவும் திராவிட நாடு தான் ஆனால் அங்கு தமிழுக்கு கொஞ்சம் ......
என்னவென்று சொல்வது , கேரளாவுக்கு சென்றால் மலையாளம் படிப்பதுதான் நல்லது , உங்களை யார் தமிழ் வழியில் படிக்க சொன்னது - கேரளா இதற்கு அனுமதிக்க கூடாது .... நான் தமிழ் மொழியை மட்டும் தான் படிப்பேன் , மற்றது தேவை இல்லை என்றால் எதற்கு கேரலா சென்றீர் ....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் எழுதி கொடுத்த துண்டுசீட்டையே ஒழுங்கா வாசிக்க தெரியாதேப்பா