Load Image
Advertisement

இம்ரான் ஆதரவு பத்திரிகையாளர் இருவர் அடுத்தடுத்து மாயம்

Two pro-Imran journalists were killed in succession    இம்ரான் ஆதரவு பத்திரிகையாளர் இருவர் அடுத்தடுத்து மாயம்
ADVERTISEMENT
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளரும், பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளருமான சமி இப்ராஹிம் திடீரென மாயமான நிலையில், இவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாக்.,கில் தெஹ்ரீக் - இ -- இன்சாப் கட்சியைத் துவங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார்.

அந்நாட்டு பார்லி.,யில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு இவரது ஆட்சி கவிழ்ந்தது.

தற்போது, ஷபாஸ் ஷெரீப் பிரதமராக உள்ள நிலையில், இந்த ஆட்சிக்கு எதிராக இம்ரான் கான் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இம்ரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பிரபல தொலைக்காட்சி நிருபர் சமி இப்ராஹிம் என்பவர்நேற்று முன்தினம் மாயமானார்.

இது குறித்து சமியின் சகோதரர் அலி ரஸா போலீசாரிடம் அளித்த புகாரில், 'இஸ்லாமாபாதில் பணி முடிந்து வீடு திரும்பிய என் சகோதரரை வழி மறித்த எட்டு பேர் கும்பல், அவரை கடத்திச் சென்றனர்' எனக் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பாக்., போலீசார், அவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

இம்ரானின் ஆதரவாளரும், மற்றொரு செய்தியாளருமான இம்ரான் ரியாஸ் காணாமல் போன இரண்டு வாரங்களில், சமியும் மாயமாகி உள்ளது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு செல்ல தடை

கடந்த 9ம் தேதி இம்ரான் கைது செய்யப்பட்டதை அடுத்து நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, அவரின் தெஹ்ரீக் -- இ - இன்சாப் கட்சியின் முன்னணி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், இம்ரான், அவர் மனைவி புஷ்ரா பீபி உட்பட கட்சியைச் சேர்ந்த 80 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு காவல் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவை வழங்கிய பட்டியலின் அடிப்படையில், அவர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement