ரயில்கள் புறப்பாடு; கோவைக்கு இரண்டாமிடம்! புறக்கணிப்பில் மட்டும் என்றுமே முதலிடம்
-நமது சிறப்பு நிருபர்-
வருவாயில் தெற்கு ரயில்வேயில், சென்னை ஸ்டேஷன்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள கோவை சந்திப்பு, இப்போது அதிக ரயில்கள் புறப்பாட்டில், தமிழகத்திலேயே இரண்டாமிடம் பிடித்துள்ளது; ஆனால் புறக்கணிப்பில் மட்டும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக, கோவை வளர்ந்து வருகிறது. இங்குள்ள விமான நிலையம், சென்னை விமான நிலையத்துக்கு அடுத்ததாக, கடந்த மாதத்தில் 18 ஆயிரத்து 11 வெளிநாட்டுப் பயணிகள், 2 லட்சத்து 23 ஆயிரத்து 533 உள்நாட்டுப் பயணிகள் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 544 பயணிகளைக் கையாண்டுள்ளது. அதேபோன்று, கோவை ரயில்வே சந்திப்பும், கடந்த ஆண்டில் ஒரு கோடி பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
ரூ.500 கோடி வரை வருவாய் தரக்கூடிய 'ஏ 1' அந்தஸ்திலுள்ள இந்த ரயில்வே சந்திப்பு, சென்னை சென்ட்ரல், எக்மோர் ஆகிய ஸ்டேஷன்களுக்கு அடுத்ததாக, தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரக்கூடிய மூன்றாவது ஸ்டேஷனாக பெருமை பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக ரயில்கள் புறப்படும் டாப் 25 ரயில்வே ஸ்டேஷன்களின் பட்டியல், சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த இரண்டாமிடத்தை, கோவை சந்திப்பு பெற்றுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து 71 ரயில்கள் புறப்படுகின்றன; அதேபோல 71 ரயில்கள் அங்கு வந்து நிறுத்தப்படுகின்றன.
அதற்கு அடுத்ததாக கோவை சந்திப்பிலிருந்து, 35 ரயில்கள் புறப்படுகின்றன; அவற்றில் 34 ரயில்கள், கோவையில் மீண்டும் வந்து சேர்ந்து, இங்கு நிறுத்தப்படுகின்றன.
ஒரு ரயில், கேரளா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எக்மோர் சந்திப்பிலிருந்து 30 ரயில்கள் மட்டுமே புறப்படுகின்றன; அதே அளவிலான ரயில்கள்அங்கு நிறுத்தப்படுகின்றன.
இவற்றுக்கு அடுத்ததாக, திருச்சி (28/29), திருநெல்வேலி (25/25), நாகர்கோவில் (23/23), மதுரை (21/22), மயிலாடுதுறை (18/18), ராமேஸ்வரம் (16/15), விழுப்புரம் (15/15), செங்கோட்டை (14/14) ஆகிய ரயில்வே சந்திப்புகள், முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

கோவையிலிருந்து இன்னும் கூடுதல் ரயில்களை இயக்கும்பட்சத்தில், நிச்சயம் அமோக வரவேற்பும் இருக்கும்; வருவாயும் அதிகரிக்கும்.
இப்போது வருவாயில் மூன்றாமிடத்தையும், ரயில்கள் இயக்கத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ள கோவை சந்திப்பு, ரயில்வே துறையின் புறக்கணிப்பில், என்றுமே முதலிடத்தில்தான் இருக்கிறது என்பதுதான் வேதனை.
வாசகர் கருத்து (5)
Our MP'S are busy in eating at the Canteen only .
மோடி வாழ்க
40 MP ena pudungaranga
பேச தெரியாதவங்கள, திறமை இல்லாதவங்கள தேர்ந்தெடுத்து அனுப்புனா எப்படி கேப்பாங்க ...பணம் வாங்கி வோட்டு போட்ட ஆப்படிதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சில நாட்களுக்கு முன்பு கோவை சென்றிருந்தேன். கோவை ரயில் நிறுத்தத்தின் நுழைவாயில் மிகவும் குறுகி காணப்படுகிறது. நுழைவாயிலில் எப்பொழுதும் பயனியர்களின் கட்டுக்கு அடங்காத கூட்டம். மேலும் வாகனங்கள் நிறுத்த, மற்றும் வந்துபோக இடவசதி மிக மிக குறைவு. மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தவேண்டும். நாட்டில் எங்கெல்லாமோ உள்ள சிறிய சிறிய ரயில் நிலையங்கள், அதிக வருமானம் ஈட்டாத ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடுகின்றன. ஆனால் வருமானம் அதிகம் ஈட்டும் கோவை ரயில் நிலையம் ஏன் மேம்படுத்தப்படக்கூடாது?