கர்ப்பிணி மனைவியை அறையில் அடைத்து பேராசிரியர் தற்கொலை
கொரட்டூர், கொரட்டூர் அடுத்த பாடி, வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சந்தீப்குமார், 32. தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மீனாட்சி, 25. தம்பதிக்கு கடந்தாண்டு டிச., 4ம் தேதி திருமணம் நடந்தது.
மீனாட்சி, தற்போது மூன்று மாத கர்ப்பிணி. இந்த நிலையில், அவரது, 'வளைகாப்பு' நிகழ்ச்சியை, எங்கு நடத்துவது என்பது குறித்து, இருவருக்கும் இடையே, நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சந்தீப்குமார், மனைவியை படுக்கை அறையில் விட்டு, வெளிப்பக்கம் தாழிட்டுள்ளார்.
சிறிது நேரம் அழுத மீனாட்சி, அப்படியே துாங்கி விட்டார். நேற்று காலை கண் விழித்த பிறகும், கணவர் கதவை திறக்காததால், அம்பத்துாரில் வசிக்கும் கணவரின் தங்கை நந்தினியிடம், 30, மொபைல் போன் மூலம் உதவி கோரி இருக்கிறார்.
உடனடியாக, அண்ணனின் வீட்டிற்கு சென்ற நந்தினி, அங்கு ஹாலில் அண்ணன் சந்தீப்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின், மீனாட்சியை வெளியே மீட்டார். இது குறித்து, கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!