பெட்டி கடையை உடைத்த போதை ஆசாமிகள் கைது
மெரினா, திருவல்லிக்கேணி, கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் பொன்னி, 46. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 17ம் தேதி, இவரது கடைக்கு வந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, கணேசபுரத்தைச் சேர்ந்த தனுஷ், 22, மூர்த்திங்க நகரைச் சேர்ந்த வசந்த், 20, ஆகியோர் வந்து, புகையிலை பொருளான 'ஹான்ஸ்' கேட்டனர்.
'ஹான்ஸ் விற்பதில்லை' என பொன்னி தெரிவித்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த இருவரும் கத்திமுனையில், கடையை அடித்து நொறுக்கினர்.
புகாரின்படி இருவரையும் கைது செய்த மெரினா போலீசார், சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!