மது போதையில் தகராறு: நண்பரை குத்தியவர் கைது
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, சிவானந்தா சாலையைச் சேர்ந்தவர்கள் கருப்பாண்டி, 32, ஜின்சீர், 33. இருவரும், மெரினா கடற்கரையில் குதிரை சவாரி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சேப்பாக்கம், பெல்ஸ் சாலையிலுள்ள 'டாஸ்மாக்' கடையில் மது வாங்கி, அங்குள்ள நடைபாதையில் அமர்ந்து, இருவரும் குடித்துள்ளனர்.
அப்போது, போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கருப்பாண்டி மது பாட்டிலை உடைத்து, ஜின்சீர் கழுத்தில் குத்திவிட்டு தப்பினார்.
தகவலின்படி வந்த திருவல்லிக்கேணி போலீசார், ஜின்சீரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கருப்பாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!