Load Image
Advertisement

வாசிப்பை நேசித்தால் தமிழ் இனிக்கும்!: தமிழ் பாடத்தில் தடுமாற்றம் ஏன்?

If you love reading Tamil will be sweet! Why the trouble in Tamil lesson?   வாசிப்பை நேசித்தால் தமிழ் இனிக்கும்!: தமிழ் பாடத்தில் தடுமாற்றம் ஏன்?
ADVERTISEMENT
திருப்பூர்: தமிழ் பாடத்தில் மதிப்பெண் குறைய, அப்பாடத்திற்கான முக்கியத்துவம் குறைவு என, ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

நடந்து முடிந்த பொதுத்தேர்வில், ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் ஆறுதல் அளிப்பதாக இருப்பினும், பாட வாரியான தேர்ச்சியில், தாய்மொழியான தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கவலையளிப்பதாகவே உள்ளது.திருப்பூர் மாவட்ட அளவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 724 பேர்; 11ம் வகுப்பில், 117 பேர்; 12ம் வகுப்பில், 214 பேர் தோல்வியடைந்தனர்.

தமிழில் மாணவர்கள் பின்தங்க காரணம் என்ன?



ஹரிஹரன், அரசுப்பள்ளி தமிழாசிரியர்: தமிழை பொறுத்தவரை, தொடர்ந்து மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி மற்றும் இலக்கணப்பயிற்சி கொடுக்க வேண்டும். வகுப்பில், மொழிப்பாடத்துக்கு கூடுதல் பயிற்றுவிப்பு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். பிற பாடங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மற்றும் அந்தப்பாடம் சார்ந்து தொடர்ச்சியாக நடத்தப்படும் வகுப்பு அளவிலான சிறு தேர்வுகளை, தமிழ் பாடத்துக்கும் நடத்த வேண்டும். நிறைய வீட்டுப்பாடங்கள் வழங்க வேண்டும். பிற மொழிகளுக்கு வழங்கும் முக்கியத்துவம், தமிழ் பாடத்துக்கும் வழங்க வேண்டும். அப்போது தான், மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

வாணி, தனியார் பள்ளி தமிழாசிரியை:ஐந்து பாடங்களை ஆங்கில வழியிலும், ஒரு பாடம் மட்டும் தமிழில் படிக்கும் போது, மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். தமிழை பொறுத்தவரை வாசிப்பு பயிற்சி என்பது மிக முக்கியம்.

தமிழை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கலாம்; ஆனால், பிழையின்றி எழுத முடியாது. தெளிவான உச்சரிப்புடன் வாசித்து பழகினால் தான், பிழையின்றி எழுத முடியும். ஆரம்பக் கல்வியில் சரியான முறையில் எழுத்துப்பயிற்சி இல்லாமல், உயர், மேல்நிலை வகுப்புக்கு செல்வதும், அப்பாடத்தில் தோல்வியடைய முக்கிய காரணமாகிவிடுகிறது. ஆர்வத்துடன் படித்தால், தமிழ் பாடம் மிக எளிது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்ட போது,''தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement