Load Image
Advertisement

அதிகரிக்கும் விண்வெளி குப்பை: காத்திருக்கு ஆபத்து

Growing Space Debris: A Danger in Waiting    அதிகரிக்கும் விண்வெளி குப்பை: காத்திருக்கு ஆபத்து
ADVERTISEMENT
விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றி வரும் விண்வெளி குப்பைகள், மனிதர்கள் மேல் விழ 10 சதவீத வாய்ப்பு உள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து ஆய்வுக்காக ராக்கெட், செயற்கைக்கோள், விண்கலம் செலுத்தப்படுகின்றன. நிலவு, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட மற்ற கோள்களை ஆய்வு செய்வதற்காகவும் அனுப்பப்படுகின்றன.
செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பின் ராக்கெட் கழன்று விடும். இவை விண்வெளியில் மிதக்கும். அதேபோல செயற்கைக்கோள், விண்கலம் போன்றவை அது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்துக்குப்பின், சம்பந்தப்பட்ட விண்வெளி மையத்துடனான கட்டுப்பாட்டை இழக்கிறது. இதைத்தொடர்ந்து இவற்றின் பாகங்கள் விண்வெளியில் குப்பையாக சுற்றுகின்றன. சில ராக்கெட், செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவும்போது வெடித்துச் சிதறுவது உண்டு. இவையும் விண்வெளி
குப்பையாக மாறுகின்றன.

இவ்வாறு விண்வெளியில் சுற்றும் குப்பைகள் அடுத்த பத்தாண்டுக்குள் பூமியில் யாராவது ஒருவர் மீது விழுந்து உயிரை பறிக்கும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர். 2018ல் சீனாவின் 'டியாங்காங்' விண்வெளி ஆய்வு மையம், மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் நல்லவேளையாக பசிபிக் கடலில் விழுந்தது. சமீபத்தில் அமெரிக்காவின் 'ரெஷி' செயற்கைக்கோள் (300 கிலோ) மனிதர்கள் மேல் விழ 2500க்கு ஒரு சதவீத வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது. ஆனால் இது சூடான் - எகிப்து இடையில் சஹாரா பாலைவனத்தில் விழுந்த தால் விபத்து தவிர்க்கப்பட்டது.


6380

உலகில் 1957ல் இருந்து இதுவரை 6380 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. 15,430 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

13
விண்வெளியில் 10 செ.மீ., மேலான அளவில் 36,500, 1 செ.மீ., - 10 செ.மீ.,க்குள் 10 லட்சம், 1 மி.மீ., - 1 செ.மீ., அளவில் 13 கோடி பாகங்கள் (விண்வெளி குப்பை) சுற்றுகின்றன.


10,800

விண்வெளியில் தற்போது 10,800 டன் (ஒரு டன் என்பது 1000 கிலோ) அளவிலான விண்வெளி குப்பைகள் பூமியை சுற்றுகின்றன.

******************


வாசகர் கருத்து (2)

  • Pary Manicom - perth,ஆஸ்திரேலியா

    இந்திய அரசியல் வானில் தற்போது மிதக்கும் குப்பைகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டும்

  • ஆக .. - Chennai ,இந்தியா

    அங்கேயே எரியவிட்டு சாம்பலாக்க வழிமுறைகள் இல்லையா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement