Load Image
Advertisement

புடவையில் நீங்கள் உயரமாக தெரிய வேண்டுமா?

Want to look taller in a saree?   புடவையில் நீங்கள் உயரமாக தெரிய  வேண்டுமா?
ADVERTISEMENT

உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி புடவை கட்டினால் சற்று உயரமாக தெரிவார்கள். புடவை கட்டுவதற்கான சூப்பரான டிப்ஸ்கள் இதோ..


உயரம் குறைவான பெண்கள் பெரிய பார்டர் இருக்கும் புடவைகளை தவிர்க்கலாம். இது அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாக காட்டும். மாறாக, சிம்பிளான மற்றும் மெல்லிய பார்டர் கொண்ட புடவைகளை அணிவது சிறந்த தோற்றத்தைத் தரும்.
Latest Tamil News
பிரின்ட்கள் மற்றும் டிசைன்கள் கொண்ட புடவைகள் உயரம் குறைவான பெண்கள் பெரிய பெரிய பிரின்ட்கள் மற்றும் டிசைன்கள் இருக்கும் புடவைகளை தவிர்க்கலாம். இது உடல் தோற்றத்தை சிறியதாக காட்டும். அதற்கு பதிலாக, சிறிய பிரின்ட்கள் இருக்கும் புடவையைத் தேர்வு செய்யவும். இவை உயரமாக இருப்பது போன்ற மாயத்தை உருவாக்கி அவர்களை உயரமாக காட்டும்.


Latest Tamil News
எடை குறைந்த லேசான துணிகள் உடலை நீளமாக காட்டும். எனவே, உயரம் குறைவான பெண்கள் சிப்பான், ஜார்ஜெட், சில்க் போன்ற லேசான துணியில் தயாரிக்கப்பட்ட புடவைகளை அணியலாம். இந்த வகையான புடவையில் உயரமாக தெரிவார்கள்.

செங்குத்தான கோடுகளை கொண்ட புடவைகள்



உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், செங்குத்தான கோடுகளை கொண்ட டிசைன் புடவைகளை கட்டினால் உயரமாக தெரிவார்கள். செங்குத்து கோடுகள் உயரமாக இருப்பது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கி அவர்களை உயரமாக காட்டும்.

கச்சிதமான பிளவுஸ்களை அணியுங்கள்.



மிகவும் தளர்வான பிளவுஸ்களை அணியவதை தவிர்க்கலாம். இது தவிர, பிளவுஸின் நீளமும் மீடியமாக இருக்க வேண்டும். பிளவுஸ் எப்போதுமே மிகவும் நீளமாகவோ அல்லது சின்னதாகவோ இருக்கல் கூடாது.

சரியான நெக் டிசைன்களை தேந்தெடுங்கள்



குட்டையான கழுத்தை கொண்டவர்கள் லாங் நெக் டிசைன் கொண்ட பிளவுஸ்களை தவிர்க்கலாம்.. V- வடிவ நெக் டிசைன்கள், சதுரம் மற்றும் ஸ்வீட்ஹார்ட் எனப்படும் பின்புறம் முழுவதுமாக மூடி முன்புறம் லோவாக இருக்கும் நெக் டிசைன் பிளவுஸ்கள் கழுத்துக்கு நீண்ட மற்றும் மெலிதான தோற்றத்தைத் தரும். உயரமாகவும் காட்டும்.

கருப்பு நிற புடவை



Latest Tamil News
கருப்பு நிற புடவை உங்களை எப்போதும் ஏமாற்றாது. உடலை ஒல்லியாக காட்டுவது மட்டுமல்லாமல் தோற்றத்தையும் உயரமாகவும் காட்டும்.
எனவே, இந்த வழிமுறைகளை பின்பற்றி உயரம் குறைவான பெண்கள் புடவையில் தங்களை உயரமாக காட்டிக் கொள்ளலாம்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement