ADVERTISEMENT
எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி (MG ZS EV) மாடல் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில், மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்த் வரும் எம்ஜி நிறுவனம், எஸ்யூவி செக்மெண்டில் ஏராளமான தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அதோடு எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிலும் முணைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி (MG ZS EV) மாடல் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, கிட்டதட்ட இந்த கார் இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை 10 ஆயிரம் யூனிட் விற்பனையை கடந்துள்ளது.

இந்த இசட்எஸ் இவி கார் டாடா நெக்ஸான் இவி காரை விட பலமடங்கு பிரீமியம் வசதிகளில் மிக சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. ஆனால் இசட்எஸ் இவி கார் கடந்த 5 வருடங்களில் 10 ஆயிரம் யூனிட் விற்பனை என்பது, டாடா நெக்ஸான் இவி காரை பொறுத்தவரை குறைவான வளர்ச்சி தான். இருப்பினும் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், எம்ஜிஇசட்எஸ் இவி போன்ற ப்ரிமியம் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்ககூடும் என நம்பப்படுகிறது.

எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசீவ் என இரு வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரில் அதிக பவர்ஃபுல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் 8.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. ஓர் முழு சார்ஜில் 461 கிமீ தூரம் வரை இந்த எலெக்ட்ரிக் காரில் பயணிக்க முடியும். ஆனால், நெக்ஸான் இவியில் 312 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.

இசட்எஸ் இவி இ-காரில் 75க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், 25.7 செமீ அளவுள்ள எச்டி ரக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் க்ளஸ்டர், டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், என எக்கசக்க தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதுதவிர, ரியர் டிரைவ் அசிஸ்ட், பார்க்கிங் சென்சாருடன் கூடிய 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் மழை பொழிந்தால் தானாகவே வைப் செய்யும் வைப்பர் ஆகியவையும் எம்ஜி இசட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது இசட்எஸ் இவி காரின் எக்சைட் தேர்வு ரூ. 23.38 லட்சம் என்கிற விலையிலும், எக்ஸ்க்ளூசீவ் 27.29 லட்ச ரூபாய் என்கிற விலையிலும் விற்கப்பட்டு வருகின்றது. டாடா நெக்ஸான் இவி ரூ. 14.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், எம்ஜி இசட்எஸ் இவி-யைக் காட்டிலும் 9 லட்சம் ரூபாய் வரை இதன் விலை குறைவு. இனி வரும் காலங்களில் டாடாவுக்கு போட்டியாக எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் இவி கார் விற்பனை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட பத்துலட்சம் வித்தியாசம்