உருளைக்கிழங்கு
பலருக்கும் பிடித்தமான பட்டியலில் உள்ள உருளைக்கிழங்கு கூட ஆபத்தை விளைவிக்கிறது. இது ஆச்சர்யமாகக்கூட இருக்கலாம். ஆனால், உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைகள் உள்ளன. மேலும், உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால் அதில், கிளைகோல்கலாய்டு எனும் நஞ்சு நிறைந்திருக்கும். இது ஆபத்தானது
தக்காளி
கிச்சனில் தினசரி பயன்பாட்டில் தக்காளி முக்கிய அங்கமாக உள்ளது. தக்காளி இல்லாவிட்டால் சமையலே சிறக்காது. ஆனால், அதன் தண்டு மற்றும் இலைகளில் உள்ள கிளைகோல்கலாய்டு என்ற விஷம், நம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பது பலருக்கும் சரிவர தெரியாது. எதிர்பாராவிதமாக தண்டு, இலையை சாப்பிட நேர்ந்தால், நரம்புத்தளர்ச்சி, வயிற்று உப்புசம் ஏற்படக்கூடும்;
ஆப்பிள் விதைகள்
பொதுவாக விதைகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், ஒரு சில விதைகள் அதற்கு நேரெதிராக உள்ளன. இந்த பட்டியலில் ஆப்பிள் விதைகள் உள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். ஆனால், ஆப்பிள் விதைகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆப்பிள் விதைகளில் சயனைடை உருவாக்கும் அமிக்டலின் என்ற கலவை உள்ளது. எனவே, இந்த விதைகளை சாப்பிடும்போது தலைச்சுற்றல், வாந்தி, ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும்.
காளான்
சைவ உணவுகளின் விருப்பப்பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை காளான்; பலருக்கும் பிடித்தமானது. இந்த காளானில் ஏராளமான வகைகள் உள்ளன. அதில், ஒருசில காளான்களில் (வெப்கேப்கள், கோனோசைப் ஃபிலாரிஸ் ) இயற்கையாகவே நச்சுத்தன்மைகள் நிறைந்துள்ளன. எனவே, சரியான காளான்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
விளக்கெண்ணெய்
உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக விளக்கெண்ணெய் உள்ளது. ஆனால், இதை தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு விதையில் ஆபத்து ஒளிந்துள்ளது.
பாதாம்
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதேவேளையில், ஆபத்தையும் விளைவிக்கும் தன்மை எனவே, அப்படியே பாதாமை சாப்பிடுவதை விட, தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கியோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.
வாசகர் கருத்து (2)
வைட் ரைஸ் அதிக கார்போஹைட்ரெட் இருக்கிறது. அது சுகர் உண்டாகும். ரைஸ் குறைத்து முழு தானிய உணவை எடுக்க வேண்டும்.
சோறு திங்கலாமா வேண்டாமா, அதில் என்னகுறை உள்ளது சார்