ADVERTISEMENT
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறும் முடிவை, சமயோசிதமாக பயன்படுத்தி தனது விற்பனையை அதிகரிக்க டில்லி இறைச்சி விற்பனை நிறுவனம், விளம்பரம் செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்.,30 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து ஒருமுறைக்கு ரூ.20 ஆயிரம் அளவுக்கு பொதுமக்கள் மாற்றி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இருப்பினும், மக்கள் சிலர் எப்படியாவது தங்களிடம் உள்ள நோட்டை மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில், உ.பி.,யில் உள்ள பெட்ரோல் பங்க்கில், 2,000 ரூபாய் நோட்டை அளித்தவரின் வாகனத்தில் இருந்து பெட்ரோலைமீண்டும் உறிஞ்சி எடுத்த நிகழ்வு நடந்தேறியது.
இந்நிலையில், டில்லியை சேர்ந்த இறைச்சி விற்பனை நிறுவனம் ஒன்று, விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கையாக ரூ.2,000 மட்டும் செலுத்தி, ரூ.2,100 மதிப்புள்ள இறைச்சி வகைகளை பெற்று செல்லலாமென சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், 'பிசினஸ் சென்ஸ் என்பது வாய்ப்புக்களை தன் வசமாக்கி கொள்வது தானே' என பதிவிட்டார். மற்றொரு நெட்டிசன், 'விற்பனையை அதிகரிக்க உண்மையில் செம்ம ஐடியா' என பதிவிட்டார்.
வாசகர் கருத்து (9)
உடன்பிறப்புகள் இதைவிட கெட்டிக்காரர்கள். உடன்பிறப்புகள் , சக உடன்பிறப்புகளை பெயிலில் எடுக்க லட்சக்கணக்கில் பிணைத்தொகை கட்டி வெளியே கொண்டுவந்துவிடுவார்கள்
அரசியல்வாதிகளுக்கு 2000 நோட்டை மாற்றிக்கொடுக்கும் ஆளாகக்கூட இருக்கலாம்.
இதில் என்ன வியாபாரக் கொள்ளை நடைபெறுகிறது என்று எவனும் யோசிக்கமாட்டார்.ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் பொருளைத் தான் இந்த 2100ல் கொடுப்பார்கள்
நல்ல வேலை கருப்பு பணம் எல்லாம் அப்படியே ஒழிந்துவிடும் என்று இங்கும் யாரவது கருத்து .......??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
super ji .. super .. super