ADVERTISEMENT
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை தபால் நிலையங்களில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர்.
மொத்த காலியிடங்கள்: 12,828
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி.
உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதியாக கணினியறிவு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திக்க வேண்டும்.
வயதுவரம்பு: இப்பணிகளுக்கு 18 முதல் 40 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயதுவரம்பு தளர்வும் அளிக்கப்படும்.
சம்பள விவரம்: கிளை போஸ்ட் மாஸ்டர் - 12,000
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் - 10,000

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20052023_GDS_Eng.pdf என்ற இணையதளம் முகவரியை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.23
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!