Load Image
Advertisement

"நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக": அண்ணாமலை தாக்கு

சென்னை: தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக என தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக அண்ணா பல்கலை., நீக்கியது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Latest Tamil News

இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:



அண்ணா பல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

பிரதமர் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது.

தமிழ் மொழிப் பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒரு மாணவர் கூட தமிழ்வழிக் கல்வி பொறியியல் பிரிவில் சேரவில்லை என்ற மழுப்பலான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

Latest Tamil News
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதனைச் செய்யத் தவறியது திமுக அரசின் குற்றம். செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று பாஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (22)

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    Annamalai correctly said

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

    தமிழ்நாட்டை குழப்பி குழம்பிய குட்டையிலாவது தாமரையை மலரச்செய்து , மேலிடத்து நன்மதிப்பை பெற துடியாய் துடிக்கின்றனர் இருவரும் IPS தான்

  • மதுமிதா -

    அண்ணாமலை ஜி தங்கள் பேச்சின் வேகம் செயலில் குறைந்தால் தமிழகம் இன்னொரு கர்நாடகா போல்குற்றப் பின்னணிக்கு போய்விடும்

  • raja - Cotonou,பெனின்

    அப்பு உன் கருத்து புல்லரிக்குது போ...தமிழ்ல படிகிறவனுக்குதான் இனி தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் வேலையும்முன்னு சொல்லி பார்க்க சொல்லு இந்த அரசை அப்புறம் சேர்வான்னுவோ பாரேன்...

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    அதாவது, நீங்கள் கர்நாடகாவில் மணல் கடத்த செய்துவிட்டு, தமிழகத்தில் மணல் கடத்தலுக்கு எதிராக தாங்கள் குரல் கொடுப்பது போல் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்