Load Image
Advertisement

அமித்ஷா மகனுடன் உதயநிதி சந்திப்பு

Udayanidhi meeting with Amit Shah son    அமித்ஷா மகனுடன் உதயநிதி சந்திப்பு
ADVERTISEMENT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலருமான ஜெய்ஷாவுடன், தி.மு.க., அமைச்சர் உதயநிதி தனியாக பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, விளையாட்டு துறையில் ஆர்வமிக்கவர். குஜராத் கிரிக்கெட் சங்க பொறுப்பாளராக இருந்துள்ளார். தற்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக உள்ளார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், சென்னையில் நேற்று முன்தினம் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின.

இந்த போட்டியை பார்க்க, ஜெய்ஷாவும், உதயநிதியும் வந்திருந்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து, போட்டியை ரசித்தனர். இருவரும் தனியாக சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'இருவரும் விளையாட்டு ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் சந்தித்து பேசினர். அதை அரசியல் சந்திப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என்றனர்.


- நமது நிருபர் -


வாசகர் கருத்து (17)

  • spr - chennai,இந்தியா

    சோழியன் குடுமி சும்மா ஆடாதாம் - 36 கோடி சும்மாவா யார் காலில் வேண்டுமானாலும் விழலாம் இதெல்லாம் ரஜினியிடமும் கமலஹாசனிடமும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஐ பி எஸ் மத்தியா அரசு சேர்விசு. எப்போலா வேண்டுமென்றால் அழைத்து கொள்ளப்படுவார்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும்

  • Nesan - JB,மலேஷியா

    இனி தி.மு.க வடடாரம் பயப்பட வேண்டாம். வியாபாரம் பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தின் தலை எழுத்து முடிந்து போச்சசு

  • Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா

    நல்லவர்களின் சந்திப்பு. நல்லதே நடக்கும்.

  • sankar - chennai,இந்தியா

    புது நண்பா அப்பாகிட்டே பேசி ஐடி ஈடி இவங்களையெல்லாம் கொஞ்சம் தள்ளிநிற்க சொல்லு உயிர் நண்பா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement