கருத்தரங்கில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''வேளாண் பல்கலை, சர்க்கரை சத்து குறைவாக உள்ள நெல்லை கண்டறிய வேண்டும். வேளாண் துறையில் புதிய, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும்,'' என்றார்.
வேளாண் பல்கலையில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்காக ஆராய்ச்சி மாணவர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தாண்டு, ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
சிறு தானிய வளர்ச்சிக்காக, தரமான விதைகள் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக, ரூ.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து கள் இறக்குவதற்கான, விவசாயிகள் கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினரிடையேயும் கலந்தாலோசித்து, அரசு முடிவு எடுக்கும்,'' என்றார்.

விழாவுக்கு, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். பல்கலை பயிர் இனப்பெருக்கம், மரபியல் மைய இயக்குனர் ரவிகேசவன் வரவேற்றார். வங்கதேசம் டாக்காவில் உள்ள, ஷெரி பங்களா வேளாண் பல்கலை துணைவேந்தர் முகமது ஷாகிதுார் ரஷித் புயான், உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், தமிழ் கடவுளான முருகனை அவமதிக்கும் வகையில், பேசிவிட்டு, ஜோவியலாக பேசியதாக கூறியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
விழாவில் அவர் பேசுகையில், ''முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என, தினையை உட்கொண்டார். அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி. இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் தினை மாவு சாப்பிட்டார்...''. எனக்கூறிய அவர், நிலைமையை புரிந்து கொண்டு சட்டென்று, ''ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்,'' என உளறி சமாளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'தினையை, முருகனை எப்போது கண்டுபிடித்தனர் எனத் தெரியவில்லை,'' என்றார். அமைச்சரின் இப்பேச்சால் அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து (59)
கேவலப்படுத்துவது என்று முடிவு செய்து விட்டு தான் மேடை ஏறி உள்ளார் .அனைவரும் வெட்க பட வேண்டும் .
காசுக்காக கையேந்தி ஓட்டு போட்டுவிட்டு இப்போ சொல்லி என்ன பயன் ஒன்னும் இல்லை
தலைவரின் தலைவர் கேட்டால் என்ன நக்கலா யாரை குத்திக்காட்டுகிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது
ஆட்சியின் அலங்கோலத்தை திசை திருப்பத்தான் ... அப்படியே பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு கோவம் வந்தாலும் தேர்தல் நேரத்துல ஓட்டுப்போட ரெடியா இருக்காங்களே ????
அதிகார போதை தலைக்கு மேல்.