Load Image
Advertisement

ஓப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ்; இதன் கேமராவை அடிச்சுக்க ஆளே இல்ல!

OPPO Reno 10 series with up to 120Hz display, 100W charging launched in China ஓப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ்;  இதன் கேமராவை அடிச்சுக்க ஆளே இல்ல!
ADVERTISEMENT
ஒப்போ நிறுவனம் அதன் புகழ்பெற்ற ரெனோ சீரிஸில் 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro Plus) மாடலை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.


இந்தியாவில் ஓப்போ ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இதன் கேமரா செட்டப்பே இந்த அமோக வரவேற்புக்கு காரணம். அந்த அளவிற்கு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இதன் டிசைன் மற்றும் கேமரா செட்டப் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இந்த வரவேற்ப்பை மேலும் இரட்டிப்பாக்க ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Oppo Reno 10 Pro Plus) ஸ்மார்ட்போனை சீனாவில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. சில நாட்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Latest Tamil News
இந்த ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல், 6.74 இன்ச் ஃபுல்எச்டி+ கர்வ்ட் ஓஎல்டி (OLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. அதேபோல் இதுவொரு 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) மற்றும் 1.5K ரெசொலூஷன் (Resolution) கொண்ட புரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளேவாகும். இது யூசர்களுக்கு சிறப்பான ஸ்க்ரீன் அனுபவத்தை வழங்கும்.


பெர்ஃபாமன்ஸை பொறுத்தவரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ( Qualcomm Snapdragon 8+ Gen 1) பிராசஸர் உடன் கூடிய ஆண்டிராய்டு 13ல் இயங்குகிறது. அதோடு ரெனோ சீரிஸ்களுக்கான பிரத்யேக கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) உடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியன்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

Latest Tamil News
கேமரா செட்டப்பை பற்றி பார்க்கும்பொழுது, மெயின் கேமராவுக்கு சோனி நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் (Flagship) சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் (Main) கேமரா + 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் (Telephoto Lens) + 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் (Wide-Angle Lens) என டிபிள்லேயர் செட்டப் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு 32 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.


பேக்கப்பிற்கு, 4700mAh பேட்டரி மற்றும் 00W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக, ஸ்ட்ராங்கஸ்ட் கூலிங் சிஸ்டம் (Strongest Cooling System) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் காரணமாக போன் வெப்பமடைவதை தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Latest Tamil News
ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடலை பொறுத்தவரை பிரில்லியண்ட் கோல்டு (Brilliant Gold), ட்விலைட் பர்ப்பிள் (Twilight Purple) மற்றும் மூன் ஸீ பிளாக் (Moon Sea Black ) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 16 ஜிபி - 256 ஜிபி வேரியண்ட் விலை 3,899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,800) எனவும், 16 ஜிபி - 512 ஜிபி வேரியண்ட் விலை 4,299 (இந்திய மதிப்பில் ரூ.50,450) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement