Load Image
Advertisement

லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு

Memorial to Lee Kuang in Tamil Nadu: Stalins speech in Singapore   லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு
ADVERTISEMENT

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உண்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதை போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவு படுத்திட முடியாது.

Latest Tamil News சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் நலன் காக்க தமிழக அரசு பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும். சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தின் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (48)

  • P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா

    இவர் போகிற இடத்தில் எல்லாம் எல்லாருக்கும் சிலை வைப்பேன் என்று சொல்லி மெரினா பீச்சை பேனா சின்னத்திற்கு பக்கதில் வெளி நாட்டினர்களுக்கு சிலை வைத்து நல்ல பேரை வாங்கி செல்வார்.

  • adalarasan - chennai,இந்தியா

    இங்கு உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் வியாதிகள் சிலைகள், போறாதா? வேண்டுமெனால், அங்கேயே வைக்கலாமே, லட்சி செலவில்?

  • seshadri - chennai,இந்தியா

    மிகவும் முட்டாள் தனமாக உள்ளது. இவர் போகும் ஊர்களின் தலைவர்களுக்கும் தமிழகத்தில் சிலை வைப்பர் போல உள்ளது. அவர் நம் நாட்டிற்கு என்ன செய்தஆர் என்று சிலை? இவர் சிலை வைக்கிரன் என்று சொன்ன உடன் அங்கிருந்து எல்லா தொழிலும் இங்கு வந்து விடுமா நம் வரிப்பணம் வீணாகிறது.

  • அப்புசாமி -

    பேனாவுக்கு பதில் இதைச் செய்யுங்க. சிங்கப்பூர் தமிழர்களுக்கு ரொம்ப நல்லது செஞ்சிருக்காரு.

  • ராமகிருஷ்ணன் -

    லீகுவான்யு அவர்களின் நேர்மையான ஆட்சி பற்றி துண்டு சீட்டுக்கு தெரியுமா. அங்கே உள்ள தமிழ் மக்களை கருப்பு பணம் 💵 வெள்ளையாக்க பயன்படுத்த தெரியும். 🗿 சிலை வைக்கிறேன் என்ற டகால்டி 🍦 ஐஸ் வைக்கிறது எல்லாம் சீனனிடம் பலிக்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்