ADVERTISEMENT
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே, பாதுகாப்பு தடுப்புகள் மீது டிரக் ஒன்று மோதியது. இதனையடுத்து அந்த டிரக்கை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த இளைஞரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அதில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும், தற்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வரும் சாய் விர்ஷித் என்பது தெரியவந்தது. பாதுகாப்பு தடுப்புகளை வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தை செலுத்த முயன்றதால் அவரை, கைது செய்யப்பட்டார்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், டிரக்கை, சாய் விர்ஷித் வாடகைக்கு எடுத்து வந்துள்ளார். போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரிவர்சில் எடுக்க முயன்ற போதும் டிரக் தடுப்புகள் மீது மோதியது. இந்த தாக்குதலை 6 மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக போலீசாரிடம் சாய் விர்ஷித் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். எப்படி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற கேள்விக்கு, அவர் அதிபரை கொலை செய்வதுடன், எனது பாதையில் குறுக்கே நிற்கும் அனைவரையும் தாக்குவேன் எனக்கூறினார். டிரக்கில் நாஜிக்கள் கொடி மற்றும் சின்னம் இருந்தது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
வாசகர் கருத்து (12)
இதுக்கெல்லாம் அமெரிக்கா போனது வேஸ்ட், பேசாம மணல் லாரி ஓட்டுற திமுக கவுன்சிலரா ஆயிருக்கலாம். ஹாஹாஹா...
வீடு மாற்ற உபயோகிக்கப்படும் டிரக். வெள்ளை மாளிகை வேலியின் பக்கத்தில் ரிவர்சில் மோதியதில் வேலிக்கு சேதம். விசாரணையில் ஒரே காமடி. ஏற்கனவே கடன் முகட்டை உயர்த்த சிக்கல் - அதை மறைக்க இப்படி ஒரு மரண உருட்டு போலத்தான் தெரிகிறது.
இனி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை இங்குள்ள சில அமெரிக்கர்கள் இளக்காரமா பார்க்க போறானுக.
இந்த பையன் ஒரு வலதுசாரி அப்ப இந்தியால எந்த கட்சின்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பேரைப் பாத்தா தெலுங்கு நாடு மாதிரி இருக்கு. சொந்த ஊரு ஓங்கோலா இருக்குமோ?