புதுடில்லி: இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் விஞ்ஞானி ஆர்.கே.மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்தது. இனி வெயிலின் தாக்கம் குறையும். இதன் காரணமாக, ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, உ.பி., அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். தமிழகத்திலும் மழை பெய்யும்.
இனிமேல் வெப்பநிலை குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் அடுத்த 2- 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவில் புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. நாட்டில் வெப்ப அலைகள் முடிந்துவிட்டதால், வெப்பநிலை குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்
வாசகர் கருத்து (5)
வழக்கம் போல இவர்கள் சொல்வதற்கு எதிராக நடக்க கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்
வாய்ப்பு இல்லை. வெப்பம் அதிகரிக்க கூடும். இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் சென்னையில் சூடு தாங்காது.
இயலாதவர்களை இறைவன் காத்தருள்வான்.
மதியம் ஒரு மணி வெயிலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்கும் போது அனுபவிக்கும் கொடுமை பல கிலோ மீட்டர்கள் நடப்பவர்களுக்கு எப்படியிருக்கும் என்று அனுபவித்து பார்த்தால் தான் புரிகிறது. அப்பாடா !! இந்த செய்தியை கேட்ட பிறகு தான் நிம்மதியே வந்திருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால், இதற்கு நேர் மாறாகத் தான் நடக்கும்