ADVERTISEMENT
ஒடிசாவில் உள்ள மத வழிப்பாட்டுத்தலங்களில், குறிப்பாக சிவன் கோவில்களில் கஞ்சா பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநில, ஆரடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாபா அகண்டல்மணி சிவன் கோவிலில் கஞ்சா பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அனந்த பலியா அறக்கட்டளையின் தலைவரான பலியா பாபா, கடந்த ஏப்., 13ம் தேதி, ஒடிசா மாநில கலால் துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், 'சிவன் கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும், சிவபெருமானின் பெயரில் கஞ்சாவை அதிகமாகப் பயன்படுத்துவது அந்த இடத்தின் மத உணர்வை மாசுபடுத்துகிறது. சிவன் கஞ்சா பயன்படுத்துவதில்லை. காலப்போக்கில், ஹிந்து மதம் மற்றும் அதன் கடவுள்கள் பற்றிய பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. கஞ்சாவிற்குப் பதிலாக பல நல்ல பொருட்களை இறைவனுக்குப் படைக்கலாம்' என தெரிவித்திருந்தார்.

பானாபூரில் உள்ள பகபதி கோவிலில் ஆடு, கோழி பலியிடும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது போலவும், அதை தொடர்ந்து பெரும்பாலான கோவில்களில் தடை விதிக்கப்பட்டது போலவும், ஒடிசாவில் உள்ள அனைத்து சைவ கோவில்களிலும் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப்படுமென அம்மாநில கலால் துறை அமைச்சர்
அஸ்வினி பத்ரா தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!