புதிய பார்லிமென்ட கட்டடம் திறப்பு விழா: திமுக, ஆம் ஆத்மி, உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு
புதுடில்லி: வரும் மே28 ம் தேதி நடைபெற உள்ள புதிய பார்லி. கட்டட திறப்பு விழாவை ஆம் ஆத்மி, இடது சாரியை கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

புதிய பார்லிமென்ட் கட்டடம் வரும் 28ம் தேதியன்று, ஹிந்துத்வா தலைவர், மறைந்த வீர்சாவர்க்கரின் 140வது பிறந்த நாள் அன்று வரும் மே 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி மதியம் 12 மணியளவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா முன்னிலையில் திறந்து வைக்கிறார்.
இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பது தான் முறை என பல கட்சிகள் வலியுறுத்தியது. ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியது.
எனவே விழாவை புறக்கணிப்பது குறித்து பல்வேறு கட்சிகள் ஆலோசனை நடத்தியது. அதன்படி, திறப்பு விழாவை 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன

அதன் விபரம்:
1. காங்கிரஸ்
2. திமுக,
3. ஆம் ஆத்மி,
4. திரிணமுல் காங்கிரஸ்,
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,
6. ராஷ்ட்ரீய ஜனதா தளம்,
7. விடுதலை சிறுத்தை கட்சி,
8. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,
9. தேசியவாத காங்கிரஸ்
10. இந்திய கம்யூனிஸ்ட்,
11. சமாஜ்வாதி கட்சி,
12.ஜார்க்கண்ட் முக்தி மோர்சா,
13. கேரளா காங்கிரஸ் (எம்)
14. ராஷ்ட்ரிய லோக் தளம்
15. ஐக்கிய ஜனதா தளம்,
16. தேசிய மாநாடு கட்சி,
17. புரட்சிகர சோஷியலிச கட்சி,
18. மதிமுக,
19. இந்திய யூனிய முஸ்லிம் லீக்
வாசகர் கருத்து (60)
திருடங்க வராமால் இருப்பது நல்லது அங்க பீ டி யாரை மட்டும் அனுமதியுங்க . பிஜேபி பீடீயார் நவீன் பட்நாயக் இவர்களுக்குத்தான் கொஞ்சம் தகுதி இருக்கு
நாட்டின் தரித்திரங்கள் கலந்து கொள்ளாதது மகிழ்ச்சியே.
அப்பா. ஒருவழியா இந்த 19 கட்சிகள் புதிய பார்லி கட்டடத்துக்கு வரப்போவது இல்லையா? என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டுமோ எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுங்கள். ஜனநாயகத்தில் protest என்பது முக்கியம். ஆகையினால் 19 கட்சியினரே புதிய பார்லியை புறக்கணிப்பது நல்லது. மக்களும் மகிழ்வர்.
அப்படியே ஜனாதிபதி திறந்து வைத்தாலும், வேறு எதோ சாக்கு சொல்லி புறக்கணிப்பார்கள். இந்தியாவை பற்றிய நினைவே இவர்களுக்கு இல்லை.
எல்லாம் வயித்தெரிச்சல் .. பப்பு அங்கே உள்ள போகமுடியாது அதுனால யாரும் போகக்கூடாது