ADVERTISEMENT
சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெறும் வகையிலும், பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கிலும், தமிழக அரசு, யு.டபிள்யு.எஸ்.ஏ., என்ற புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக மின்னாளுமை இயக்ககம் சார்பில், அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், யு.டபிள்யு.எஸ்.ஏ., என்ற 'அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி' எனப்படும் புதிய 'ஆப்'பை உருவாக்குகிறது.
பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும், 'பிளம்பர், கார்பென்டர், எலக்ட்ரீஷியன்' தொடர்பான சேவைகளை பெற, இந்த செயலியில் விண்ணப்பிப்பர்.
இந்த செயலியில் பதிவு செய்துள்ள மேஸ்திரி, பிளம்பர், கார்பென்டர், டிரைவர், எலக்ட்ரீசியன், சமையலர் போன்ற, அமைப்புசாரா தொழிலாளர்கள், விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தேவையான சேவையை வழங்குவர்.
தொடர்ந்து, படிப்படியாக இதர நலவாரிய சேவைகள் இணைக்கப்படும். மொபைல் போன் செயலி மற்றும் இணையதளம் என, ஒருங்கிணைந்த தளமாக இது அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குலக்கல்வி - குலத்தொழில் - என்று யாரோ புலம்பியதாக கேள்வி