ADVERTISEMENT
சென்னை : தமிழகத்தில், 8,000 அரசு டவுன் பஸ்களில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் இனி, டிக்கெட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாகச் செல்லலாம்.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், 8,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த டவுன் பஸ்களில், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை. இதை ஐந்து வயதாக உயர்த்தி, சட்டசபையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது.
மாவட்ட, விரைவு பஸ்களில், மூன்று வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது ஐந்து வயது முதல் 12 வயதாக உயர்ந்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
ஆண் பிள்ளைகளுக்கு ஐந்து வயது முடிந்தால் பள்ளிக்குப் போக இலவச பயணம். பெண் பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசம். ஆனால் எல்லா இலவசங்களுக்கான. நிதியும் நமது வரிப்பணத்திலிருந்துதானே கொடுக்கப்படுகின்றது என்ற அறிவு டுமீல்களுக்கு சிறிதும் 😇இல்லை.
குட்டிச்சுவர் இலவச திட்டங்கள். யார் கேட்டார்கள் . ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எல்லாம் ஏழைகளா . துக்லக் ஆட்சி.
அரசு பேருந்தில் இனி இலவச பயணம் - துட்டா அப்படின்னா என்ன - என்று அறிவிப்பு வந்தால் ஆனந்தமாக இருக்கும்
முதல்ல அரசு பேருந்துல வேலை செய்யற காண்ட்ராக்ட்க்கு முதல்ல கவுன்சிலிங் குடுங்க விதிமுறைகளை சொல்லி கொடுங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சின்ன பசங்கள பார்த்து ஓசில போறன்னு எவன்னாவுது சொல்லட்டும் அப்புறம் இருக்கு