Load Image
Advertisement

காரில் வந்த தம்பதி மீது தாக்குதல்:டோல்கேட் ஊழியர்கள் அராஜகம்

Tollgate staff anarchy in attack on couple in car   காரில் வந்த தம்பதி மீது தாக்குதல்:டோல்கேட் ஊழியர்கள் அராஜகம்
ADVERTISEMENT
திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில், கட்டணம் செலுத்தி காரில் கிளம்பிய தம்பதியை, டோல்கேட் ஊழியர்கள் தாக்கியது குறித்து போலீசார் விசாரித்தனர்.

சென்னை, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பிரபு குடும்பத்தினர், சுற்றுலா சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பலுார் டோல்கேட்டை கடக்க முயன்ற போது, நான்காவது பாதையில், 'பாஸ்டாக்' இயந்திரம் வேலை செய்யவில்லை.

அதனால் காரை ரிவர்ஸ் எடுத்து, மூன்றாவது பாதைக்கு வருமாறு டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். அப்பாதையில், பிரபுவின் காருக்கு முன்னால் சென்ற கார் நீண்ட நேரமாக நின்றது.

அந்த கார் டோல்கேட்டை கடந்து சென்ற பின், பிரபுவின் காருக்கான கட்டணம் பாஸ்டாக் மூலம் எடுக்கப்பட்டு விட்டது. கட்டணம் எடுக்கப்பட்ட பிறகும் கார் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, பிரபு டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டு, அங்கிருந்து வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது, டோல்கேட் பெண் ஊழியர் ஒருவர் காரை பலமாக தட்டி ஆபாசமாக பேசினார்.

காரில் இருந்து இறங்கிய பிரபு, டோல்கேட் ஊழியர்களிடம் அதுகுறித்து கேட்டார்.

அப்போது, பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை, பெண் ஊழியர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கடுமையாக தாக்கினர். இதில், பிரபுவின் சட்டை கிழிந்தது. போலீசார் விசாரித்தனர். இச்சம்பவத்தை பின்னால் காரில் வந்த ஒருவர் வீடியோ எடுக்க, சமூகவலைதளங்களில் அது வேகமாக பரவி வருகிறது.


வாசகர் கருத்து (5)

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    மதுரை என்று அழிகிறதோ அன்றுதான் ரௌடிசமும் அழியும் .....

  • N SASIKUMAR YADHAV -

    பேசாமல் கப்பலூர் டோல்கேட்டை மூடிவிடுவது உத்தமம். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ரவுடிகளாகவே இருக்கிறார்கள் . நிறைய பிரச்சினை செய்கிறார்கள் . ஆணும் பெண்ணும் சமம் என்பது கப்பலூர் டோல்கேட்டில் செய்த ரவுடித்தனத்தால் நிருபிக்கப்பட்டுவிட்டது

  • JAISANKAR - Mamallapuram,இந்தியா

    கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Kandhu Vatti Vasool ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement