Load Image
Advertisement

இரவு 3 முதல் காலை 9 மணிவரை தூங்கியும் ஃபிட்னஸ்; இது புடின் ஸ்டைல்..!

3pm to 9am Sleep Fitness; This is Putin style..!   இரவு 3 முதல் காலை 9 மணிவரை தூங்கியும் ஃபிட்னஸ்; இது புடின் ஸ்டைல்..!
ADVERTISEMENT

பொதுவாக இரவு கண் விழித்து நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். அவர்களது உடலின் உயிரியல் கடிகாரம் மாறுபடும். இதனால் அவர்களுக்கு நாள்பட மைக்ரைன் தலைவலி, வயிற்று உபாதைகள், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன் ஏற்படும் என மருத்துவத் துறை எச்சரிக்கிறது.

ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தினமும் இரவு இரண்டரை அல்லது மூன்று மணிக்கு தூங்கி காலை ஒன்பதரை மணிக்கு விழிக்கிறார். ஆனால் 71 வயதிலும் ஃபிட்டாக இருக்கிறார். இது எப்படிச் சாத்தியமென நீங்கள் நினைக்கலாம். அவரது ஒருநாள் உடற்பயிற்சி மற்றும் டயட் குறித்து தெரிந்துகொண்டால் அவர் எப்படி இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பது புரியும்.
Latest Tamil News
உலகையே மிரட்டி கைக்குள் வைத்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். இன்னும் பல ஆண்டுகளுக்கு தனது ஆட்சி கலையாமல் இருக்க ஏற்றவாறு ரஷ்ய அரசியலில் சட்ட திருத்தத்தையும் மேற்கொண்டு விட்டார். இனி அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாட்டின் அதிபராகவே அவர் தொடருவார் என்பது உண்மை. புடின் தனது கிரெம்லின் மாளிகையில் எவ்வாறு பணியாற்றுகிறார், எப்போது ஓய்வெடுக்கிறார் எனப் பார்ப்போம்.

காலை ஒன்பதரை மணிக்கு பொறுமையாகக் கண்விழிக்கும் புடின், முதலில் தனது ஆடம்பர நீச்சல் குளத்தில் வேக நீச்சல் போடுவார். பின்னர் ஜிம் சென்று வார்ம் அப் பயிற்சிகள் செய்வார். ஜிம்மிலேயே செய்திகள் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வார். பின்னர் அமைச்சர்களுடன் காலை உணவருந்துவார். பெரும்பாலும் ஓட்ஸ் கஞ்சி, ஆம்லெட் உள்ளிட்ட முட்டை ரகங்கள், பிளாக் காஃபி, பழரசம் உள்ளிட்டவையே அவரது காலை உணவில் இடம்பெறும். டயட் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருப்பார்.
Latest Tamil News
பின்னர் அரசு ஆவணங்களை சில மணிநேரம் நோட்டமிட்டு அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளைத் திட்டமிடுவார். பின்னர் ஒன்றரை மணியளவில் மதிய உணவருந்துவார். இவ்வாறு நாள் முழுதும் ஆக்டிவாக இருக்கும் புடின், மதியம் மூன்றரை மணியளவில் தனது சொகுசு காரில் கிரெம்லின் மாளிகை நோக்கிக் கிளம்புவார்.
கிரெம்லின் வாசலில் இருந்து அவரது கேபினுக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். பாதுகாப்பு கருதி இந்தப் பாதை வளைந்து வளைந்து செல்லும். இந்தப் பாதையில் பாதுகாப்புப் பணியாளர்கள் உடன் இருப்பர். கேபினுக்கு புதிதாக வரும் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் வழியைக் கண்டுபிடித்துவிட முடியாது. புடினுக்கு இந்த வழி மனப்பாடம். பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வணக்கம் கூறியபடியே இந்தப் பாதையில் ரஜினிபோல வேகமாக நடந்து செல்வார். இதுவே ஒருவித உடற்பயிற்சிதான்...!

மாலை ஐந்து மணியளவிலேயே அலுவலக வேலைகளைத் தொடங்குவார். அலுவலக வேலைகள் முடிய இரவு 2 மணிக்குமேல் ஆகிவிடும் என்பதால் கேபினிலேயே இரவு உணவு அருந்துவார். பின்னர் தனது பங்களாவுக்கு காரில் செல்லும் புடின், இரவு மூன்று மணிக்கு படுக்கைக்கு செல்வார். மீண்டும் காலை 9.30 மாணிக்கு உற்சாகமாக எழுவார்..!

எப்போதாவது மது அருந்தும் புடின், முன்னாள் ஜூடோ சாம்பியன் என்பதால் அவ்வப்போது ஜூடோ தற்காப்புப் பயிற்சிகளும் மேற்கொள்வார். காட்டில் மிருகங்களை வேட்டையாடுவது, கரடி மீதேறி சவாரி செய்வது..! உள்ளிட்டவையே புடினின் பொழுதுபோக்குகள். 71 வயதிலும் புடின் தனது உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் உலகின் பெரிய அரசியல் தலைவர்களுள் ஒருவராக இன்றளவும் நீடிக்க முடிகிறது என்றால் அது மிகையில்லை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement