ADVERTISEMENT
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக, சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்படும் நினைவகத்தின் தொடர்ச்சியாக, கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவானது.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் அரிப்பை தடுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடவும் உத்தரவிட வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற கடலோர மாநிலங்களை எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும்.' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, பேனா சின்னத்திற்கு எதிராக மீனவர்கள் தரப்பிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (50)
கேனபய ஆட்சில கிறுக்கு பயலுக்கு கொண்டாடமாம் எங்க ஊர்ல சொல்லுவாங்க...
தரமான முறையில் இருக்குமா 🙄இல்ல கடலா 😊
பக்கத்திலேயே மஞ்சள் பத்திரிகை வைக்கலாம். கிறுக்கியது எல்லாம் ஆபாசம் தான்
பேனா சிலை வேண்டாம்ன்னா அதற்கு பதில் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அதுவே கலைஞருக்கு நாம் செய்யும் மரியாதை . மத்திய அரசே ராமர் பாலம் இருப்பதை உறுதி செய்ய முடியவில்லைன்னு சொல்லிருச்சு
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
உளியின் ஓசைக்கு வரவேற்பு இல்லாததால் அலையின் ஓசை கதையை வானில் எழுதுவாரா