Load Image
Advertisement

உலக பொருளாதாரத்தில் பிரகாசமாக திகழும் இந்தியா: சிட்னியில் பிரதமர் மோடி உற்சாக உரை


சிட்னி: இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது என சிட்னியில் 20 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Latest Tamil News


Tamil News
Tamil News
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்டினியில் 20 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது மோடி மோடி எனக் கோஷத்துடன் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி. 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா வருவது மகிழ்ச்சி. இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு எரிசக்தி, பொருளாதாரம், கல்வி அடிப்படையிலானது என்றும் சிலர் கூறினர். வெவ்வேறு காலகட்டங்களிலும் இது உண்மையாக இருந்திருக்கலாம்.

இந்தியா-ஆஸ்திரேலியா உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையால் உருவானது. விளையாட்டு, உணவு, மசாலாக்கள் என பல அம்சங்கள் இந்தியா-ஆஸ்திரேலியாவை இணைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல தரப்பு மக்கள் ஆஸ்திரலேியாவில் வசிக்கின்றனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் உறவு 75 வருடங்களை நிறைவு செய்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் போலவே, களத்துக்கு வெளியேயும் எங்களது நட்பு சுவாரஸ்யமானது. இந்தியாவில் வளங்களுக்கு பஞ்சமில்லை. இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் தொழிற்சாலைகள் கொண்ட நாடாக இந்தியாவில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான நாடாக திகழ்கிறது.

கொரோனா தொற்று நோய்களில் உலகின் அதிவேக தடுப்பூசி திட்டத்தைச் செய்த நாடு இந்தியா. இன்று உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும். ஆஸ்திரேலிய கிரக்கெட் வீரர் ஷேன்வார்ன் இறந்த போது ஏராளமான இந்தியர்களும் துயரமடைந்தனர். பல நாடுகளில் வங்கி அமைப்புகள் சிக்கலில் உள்ள நிலையில் இந்திய வங்கிகளின் வலிமை பாராட்டப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Latest Tamil Newsபெயர் சூட்டிய பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் புறநகர் பகுதியில் உள்ள தெருவுக்கு லிட்டில் இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. சிட்னியில் லிட்டில் இந்தியா என பெயர் சூட்டப்பட்ட பெயர்ப்பலகையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


பிரதமர் மோடியை பாஸ் என அழைத்த ஆஸி., பிரதமர்

இந்திய பிரதமர் மோடியை பாஸ் எனக் கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டை சேர்ந்தவருக்கு இது போன்ற உற்சாக வரவேற்பை நான் பார்த்தது இல்லை. அமெரிக்க பாடகர் புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீனை விட பிரதமர் மோடி அதிக புகழ் மிக்கவராக திகழ்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து (16)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ஆனால் இந்தியாவில் ஒரு சிலருக்கு அந்த ரூ. 2,000 திரும்பப்பெறும் அறிவிப்பு வந்ததிலிருந்து அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும் என்று ஒரு பயம் தொத்திக்கொண்டுள்ளது. நேர்மையாக சம்பாதித்து இருந்தால் அந்த பயம் தேவை இல்லை. ஆனால் அவர்கள் சம்பாதித்தது திருட்டு வழியில், குறுக்கு வழியில் அல்லவா? ஆகையால்தான் அந்த பயம்.

 • Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா

  இந்தநாளில் யாரும் நன்றாக இருந்தால் பிடிக்காது. அதுவும் மோடி அவர்கள் நாம் நன்றாக இருக்கின்றோம் என சென்னாள் வெற்றெரிச்சலாகத்தான் இருக்கும். மனதில் அப்படி ஒரு வன்மம். உண்மையாக சொல்லுங்கள் உங்களது வருமானம் அதிகரிக்கவில்லையா? உங்களது குடும்பத்தில் பணப்புழக்கம் முன்பைவிட நன்றாக இல்லையா? உங்களால் நினைத்தபொழுது வீடு கார் விலைஉயர்ந்த செல்போன்கள் போன்றவை வாங்கமுடிகின்றதா இல்லையா? பிறகுஎப்படி நாம் உயரவில்லை என உங்களால் சொல்லமுடிகின்றது. எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளை பார் என்று செல்லுவார்கள் ஏன் இன்று பாக்கிஸ்தான் இலங்கை ஏன் ஐரோப்பா அமெரிக்க போன்ற நாடுகளை பாருங்கள். கொரோனாவிற்கு பிறகு உலக பொருளாதாரம் கீழேபோய்க்கொண்டுள்ளது. ஆனால் நாம் வளர்ந்துகொண்டுதானே உள்ளோம். இதில் என்ன சந்தேகம். இந்தக்காலத்தில் ஒருவரை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்றால். நான் நன்றாக உள்ளேன் என சொல்லுபர்வர்கள் மிக மிக குறைவே. மோடியை நம்நாட்டில் உள்ள நம்மைப்போல் பலர் மற்றும் எதிர்க்கட்சிகள் தவிர உலக நாடுகள் அனைத்தும் பாராட்டுகின்றன. எனவே பலருக்கு வயிற்றிச்சலாகத்தான் உள்ளது.

 • T.Thanabalasingham - London ,யுனைடெட் கிங்டம்

  யாரை,எப்போது,எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதில் கில்லாடிகள் வெளிநாட்டவர்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  India is not a Poor Country but People are made Poor by the Rich and the Government.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  India is already Shining like Anything....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement