Load Image
Advertisement

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடத்தை பிடித்து பெண்கள் சாதனை


புதுடில்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (மே 23) வெளியாகி உள்ளது. இதில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Latest Tamil News

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

Latest Tamil News
நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில், தேர்வு முடிவுகள் இன்று(மே 23) வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹரிதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஸ்ரா நான்காவது இடமும் பிடித்துள்ளனர்.


வாசகர் கருத்து (6)

  • Indhuindian - Chennai,இந்தியா

    ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியாக இருக்கும் தமிழக மாணவர்களும் டெல்லி சென்று அங்குள்ள கோச்சிங் சென்டரில் தான் படிக்கின்றார்கள். இங்கே ஒன்னாகிளாசுகூட சரியா சொல்லித்தர்றதில்லே அப்புறம் எப்படி ஐஏஎஸ். இதுதான் தமிஷக கல்வியின் நிதர்சனமான உண்மை. எது எப்படியோ திராவிட மாடல் வெற்றி பெற்றால் போதும் ஐஏஎஸ் லாம் எதுக்கு நமக்கு குவாட்டரும் பிரியாணியும் கைகாசுமே போதும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து அல்லவா

  • jagan - Chennai,இலங்கை

    தேர்வு /தகுதி இல்லாமல் ஜாதி மட்டுமே வைத்து இட ஒதுக்கீடு குடுத்தால் தான் தமிழர்கள் வரமுடியும். அதுவே திராவிட மாடல் (தகுதின்மை மட்டுமே ஒரே தகுதி இந்த திராவிடாஸ் கூட்டத்திற்கு)

  • ஆரூர் ரங் -

    தமிழ்நாட்டு உயர்ந்த ரேங்க் 107. 😶20 பேராவது தேர்ச்சி அடைந்திருந்தால் ஆச்சர்யம். மகிழ்ச்சி

  • jss -

    தமிழர் இடம் பெறவில்லையா? ஆஹா திராவிட மாடல் என்னாவது

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Congratulations....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்