ADVERTISEMENT
சென்னை : ‛‛நான் சிகரெட் பிடித்ததை கண்டித்தவர் சரத்பாபு...'' என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று ஐதராபாத்தில் மறைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். சரத்பாபு உடன் முள்ளும் மலரும் தொடங்கி வேலைக்காரன், அண்ணாமலை, முத்து வரை பல படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛என் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர். சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். சிகரெட்டை நிறுத்து, உடம்பை தேத்து நீ ரொம்ப நாள் வாழணும் என்பார். நான் சிகரெட் பிடித்தால் கூட அதை பிடுங்கி அணைத்து தூக்கி போட்டு விடுவார். அவர் முன்னால் நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். அண்ணாமலை படத்தில் வரும் சவால் டயலாக் சரியாக வரவில்லை.
10-15 டேக் போனது. அப்போது படப்பிடிப்பில் ஒரு சிகரெட் கொண்டு வர சொல்லி எனக்கு கொடுத்தார். அதன்பின் தான் அந்த டேக் ஓகே ஆனது. அவரின் அன்புக்காக இதை இங்கு சொல்கிறேன். என்னை உடம்பு பார்த்துக்கோ என சொல்லியவர் இப்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது. ரொம்ப நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தி அடையணும்'' என்றார்.
முன்னதாக ரஜினி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛இன்று(நேற்று மே 23) என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்'' என பதிவிட்டார்.
வாசகர் கருத்து (5)
So Rajini was all bad habits
ஓம் ஷாந்தி
அருமையான நண்பர் சொல்லியாவது அந்த சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டீர்களா ரஜினி? சும்மா கேட்கின்றேன்.
சரத்பாபு ஒரு சிறந்த நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர். இன்றைய நடிகர்கள் பலர் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு ஏனோ சாதித்துவிட்டதைப்போல அப்படி அலட்டிக்கொள்வார்கள். அட ஒரு சிலதுகள் ஒரு சில டிவி சீரியல்களில் நடித்து விட்டு என்ன ஆட்டம் போடுகின்றன. ஆனால் இருநூறு படங்களுக்குமேல் நடித்த சரத்குமார் அலட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சிகரெட்ட கற்றுக்கொடுத்தவர் சிகரெட்டை நிறுத்திவிட்டாரா