ADVERTISEMENT
சென்னை: 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், 'புதிய தொழில் ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்தாக உள்ளதாக' கூறினார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் 9 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று (மே 23) சிங்கப்பூர் புறப்படும் ஸ்டாலின், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மே 26 முதல் 31ம் தேதி வரை ஜப்பானில் தங்கி, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். 9 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு 31ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக.,வினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜனவரி மாதம் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இதற்கு அழைப்பு விடுப்பதற்காக முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். என்னுடன் தொழில்துறை அமைச்சர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் வருகின்றனர்.
புதிய தொழில் ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கையெழுத்தாக உள்ளன. செல்லும் இடமெல்லாம் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன். கடந்த துபாய் பயணத்தின் மூலம் ரூ.6100 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரத்துக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (31)
ஆனால் என்ன? கேட்கும் கட்டிங்கில் பெங்களூர், ஹைதராபாத் என்று ஓடி விடுகிறார்களாம்.
கடல்தண்ணியை டாஸ்மாக் சரக்கா மாத்தனும்
தொழில் தொடங்க அழைப்பது தவறில்லை. நீங்கள் கேட்கும் கமிஷனை கேட்டு பின்னங்கால் பிடறியில் பட தெரித்து ஓடி விடுகிறார்களே.
உண்மை வெளியே வந்திருச்சி ரூ 6,100 கோடி-துபாய்??யாருடைய பணம்??அதே போல் இதற்கும் உண்மை வெளியே வரும் மூன்று மாதம் கழித்து. இந்த பயணம் என்ன சொல்கின்றது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவர் போகும் இடங்களில் லூலூ மாலகள் கிடையாது். பின் யாருடன் ஒப்பந்தம் போடுகிறார். மர்ம்மாய் இருக்கும். சிங்கப்பூரில் மருமகனை சந்திப்பாரா