Load Image
Advertisement

டாஸ்மாக் முறைகேடு; மேலாளர்களே பொறுப்பு

Tasmac Malpractice; Managers are responsible    டாஸ்மாக் முறைகேடு; மேலாளர்களே பொறுப்பு
ADVERTISEMENT
சென்னை,-'மதுக் கடை மற்றும் பார்களில் முறைகேடு கண்டறியப்பட்டால், தாங்களே முழு பொறுப்பு; துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட மேலாளர்களை, 'டாஸ்மாக்' எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்பனை செய்கிறது. அவற்றில், அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.

மதுக் கடைகளை ஒட்டி, அனுமதி பெறாமல் 'பார்'கள் செயல்படுவது, பாரில் கடை மூடிய நேரத்தில் மது விற்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.

இதற்கு, மதுக் கடை ஊழியர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிக விலைக்கு மது விற்கும் கடை ஊழியர்களிடம், அபராத வசூல், கிடங்குகளுக்கு இடமாறுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விதிகளை மீறி செயல்படும் பாருக்கு, 'சீல்' வைக்கப்படுகிறது.

இனி, மதுக் கடை மற்றும் பார் தொடர்பாக பெறப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களை இடமாறுதல் செய்வது, பணிநீக்கம் போன்ற துறை ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே, ஆய்வில் அலட்சியம் காட்டாமல், முழு கவனம் செலுத்துமாறு, மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    நம் இளைஞர்கள் இப்படி முந்திக் கொண்டு முண்டியடித்துக் கொண்டு டாஸ்மாக்கில் கூடுவதை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றதே

  • chennai sivakumar - chennai,இந்தியா

    நடக்கிற விஷயமா??

  • duruvasar - indraprastham,இந்தியா

    அப்ப கலெக்ஷனுக்கு மட்டும்தான் மந்திரியா ?

  • A.Muralidaran - Chennai,இந்தியா

    பொங்கல் பரிசு கொள்முதல் பிரச்சனை என்றால் அலுவலர்கள் தான் காரணம். அதைப்போல் டாஸ்மாக் பிரச்சனை என்றால் கருர் கம்பெனி காரணம் இல்லை. ஹா ஹா ஹா.....

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அப்போ கமிசன் கேட்ட மாட்டீங்களா? டிரான்ஸ்பர் போட கமிஷன் வேண்டாமா? கொடுத்த காசை எப்படி எடுப்பது? இப்படி பலர் புலம்பல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement