ADVERTISEMENT
சென்னை, சென்னையில், அடுத்த மாதம் 13 முதல் 17 வரை, சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிக்களுகான ஜெர்சியை, எழும்பூரில் நேற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிமுகப்படுத்தினார்.
பின், ஸ்குவாஷ் வளர்ச்சிக்காக, 1.50 கோடி ரூபாய் நிதியை, தமிழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ராக்கெட் சங்கத்தின் தலைவர் ராமசந்திரனிடம் வழங்கினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உலக விளையாட்டு போட்டிகளை நடத்தவும், தமிழகத்தை நாட்டின் விளையாட்டு தலைநகராக்கவும் தமிழக அரசு முயற்சிக்கிறது. ஏற்கனவே, செஸ் ஒலிம்பியாட் மற்றும் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்துள்ளன. ஹாக்கி, சர்பிங் போட்டிகள் நடக்க உள்ளன.
இந்நிலையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகள் நடக்கின்றன.
ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில், எக்ஸ்பிரஸ் அவென்யூவில், காலை 10:30; மதியம் 1:00; மாலை 3:30 மற்றும் 6:00 மணிக்கு என, நான்கு போட்டிகள் நடக்கும்.
'நாக் அவுட்' மற்றும் அரையிறுதி போட்டிகள், இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் நடக்கின்றன. இறுதி போட்டி, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க உள்ளது. இந்தியாவுடன், ஹாங்காங், சீனா, ஜப்பான், மலே�யா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.
ஏற்கனவே, தேசிய ஸ்குவாஷ் வீரர்களில் பாதி பேர் தமிழர்களாக உள்ளனர். இந்த போட்டிகளை சென்னையில் நடத்துவதால், புதிய வீரர்கள் உற்சாகம் பெறுவர்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!