‛‛கண்டதைப் பேசுவார், கண்ட இடத்தில் தொடுவார்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு டாக்டர் மீது 23 மாணவிகள் புகார்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயக்கவியல் உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் தவறாக நடந்து கொண்டதாக 23 மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் பி.எஸ்சி., ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறை படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மதுரை அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் சையது தாகிர் உசேன் மருத்துவ கல்வி இயக்குனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது குறித்து, டீன் ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூறியதாவது:
மாணவிகள் மீது பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்வதாக உதவி பேராசிரியர் மீது மே6ல் மாணவிகள் எங்களிடம் புகார் தெரிவித்தனர். விசாகா கமிட்டி மாணவிகளிடம் தொடர்ந்து விசாரித்தது.
18, மாணவிகள், ஒரு நர்ஸ், 2 முது நிலை மாணவிகள், 2 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி எழுத்து பூர்வ அறிக்கை வாங்கப்பட்டது. இதில், உதவி பேராசிரியர் ஆப்பரேஷன் தியேட்டரில் இருக்கும் போது கண்ட இடத்தில் கையை வைப்பார்; கண்ட இடத்தில் தொட்டு பேசுவார்; ஆப்பரேஷன் தியேட்டரில் கூட முக கவசத்தை கழட்டிவிட்டு தான் பேச வேண்டும் என்பார்.
முக கவசத்தை கழற்றாவிட்டால் அவரே கழற்றி விடுவார். நிறத்தை கேலி செய்து பேசுவார். வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்ணிடம் உன் அம்மா அப்பா புண்ணியம் செய்தவர்கள்; அதனால் தான் உன்னை வெள்ளை நிறத்துடன் பெற்றிருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். விசாகா கமிட்டியினர் இவர்களின் அறிக்கையை எழுத்துப்பூர்வமாக பெற்று அந்த அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பிய பின்பு சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனையில் படித்து வரும் மாணவிகள் கூறியதாவது:
மாணவிகள் மட்டுமின்றி நோயாளிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். திடீரென்று எங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து பின்னால் இருந்து அழைப்பார், நீ அழகாக இருக்கிறாய், தலைமுடி அழகாக இருக்கிறது, புருவத்தை அழகாக வரைந்து இருக்கிறாய் என்று பேசுவார்.
பாலியல் புகார் வந்த பின்பும் அவர் தன்னை மாற்றி கொள்ளாமல் அத்துமீறி நடந்து கொண்டார். ஒரு இளம்பெண் தன் உறவினரை இழந்து கதறிய போது அவரையும் அணைத்தவாறு தேற்றி ஆறுதல் கூறினார்.
இது டாக்டரின் வேலை இல்லையே. இப்படி எல்லா தரப்பினரிடம் அவர் அசிங்கமாக நடந்து கொண்டார் என்று கூறினர்.
வாசகர் கருத்து (34)
விடியலுக்கு நன்றாக தெரியும் ஓட்டு போட மானம் கெட்ட ஹிந்துக்களின் விலை வெறும் 2000/- தான்.
சிறுபான்மையினரை இழிவு படுத்த சங்கி சக்திகளின் சதி என விசாரணை அறிக்கை வரும்.
கலா ஷேத்ரா என்றால் எளிதாக மூட வேண்டும் என்று சொல்லமுடியும். இது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவமனை, இதில் மாநில மகளிர் ஆணையம் பதுங்கி விடும். சமூக ஆர்வலர்களும் வெளி நாட்டிற்கு சென்று விடுவார்கள். மெயின் ஸ்ட்ரீம் டிவிகளும் இதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்பார்கள்.
இவனுங்க எந்த பெண்ணை வேணுமானாலும் சைட் அடிக்கலாம்.ஆனால் அவனுங்க வீட்டு பெண்களை துணிய போட்டு மூடி அடையாளங்களை எவருணக்கும் காட்டாம மறைச்சி வைப்பானுங்க.
முன்பு எல்லாம் கோவிலுக்கு சென்றால் இறைவா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், நன்கு மழை பெய்யவேண்டும் என்று வேண்டிகொள்வோம். ஆனால் இந்த கொடுங்கோல் விடியல் ஆட்சியில், இறைவா மக்களை சாராயம் குடிக்காமல் பார்த்துக்கொள், மக்களை திமுக ரவுடிகளிடம் இருந்து காபாற்று, என் நிலத்தை திமுக கவுன்சிலர்களி்டம் இருந்து காப்பாற்று, கரண்ட் கட் ஆவாமல் பார்த்துக்கொள், ஹிந்துக்களை திமுகவிடம் இருந்து காப்பாற்று என்று வேண்டி கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம்.