ரூ.2ஆயிரம் பணப்பரிமாற்றம்: சி.பி. ஐ., கண்காணிக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர்
புதுடில்லி: ரூ. 2 ஆயிரம் பணப்பரிமாற்றம் தொடர்பாக நடந்து வரும் செயல்பாடுகளை வரி மற்றும் சி.பி.ஐ., உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

மத்திய ரிசர்வ் வங்கி, தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாயை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 வரை மட்டுமே, இந்த நோட்டுகளை பயன்படுத்த வாய்ப்பளித்துள்ளது. ரூ.2ஆயிரம் தாளை நாளை(மே 23) முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவுரை வழங்கியுள்ளது. அதன் படி, ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: வங்கிகளில் பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எத்தனை ரூ.2ஆயிரம் தாள்கள் மாற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான். ரூ. 1,000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காக ரூ.2ஆயிரம் நோட்டுகள் வழங்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் ரூ.2ஆயிரம் நோட்டுக்களை வழங்குவதற்கான படிவத்தையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
நாளை முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ரூ.2ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடியிலிருந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது. அச்சிடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கிளீின் நோட்டு பாலிசியை பின்பற்றி வருகிறது. ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும்.
ரூ. 2ஆயிரம் பணப்பரிமாற்றம் தொடர்பாக நடந்து வரும் செயல்பாடுகளை வரி மற்றும் சி.பி.ஐ., உள்ளிட்ட அதிகாரிகள் வழக்கம் போல் கண்காணிப்பார்கள். தற்போது 2000 ரூபாய் வாபஸ் என்பது அரசின் வழக்கமான நடவடிக்கையில் ஒன்றுதான். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறுவதால் பெரிய பாதிப்பு கிடையாது. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அவசரப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (33)
இந்தியாவில் எல்லாம் கூட்டுக் களவாணிகள்,கணக்கு வழக்கு இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்குறாங்க , மேலும் விலைவாசி தாறுமாறாக உயரும் ....
சட்டம் போட்டுட்டு ஓட்டையை போடுவார்களா, இல்லை ஓட்டையை சுத்தி சட்டத்தை போடுவாங்களான்னு தெரியலே. டாஸ்மாக்கில் மாத்திக்கலாம்னு சொன்னாங்க. ஒரு பீர் வாங்கிட்டு 2000 ரூபாவை நீட்டினா, முடியாதுன்னுட்டாங்க. அப்போ மட்டும் பணப்பரிமாற்றம் பண்றதுக்கு டாஸ்மாக்.
இப்பவாவது எவ்வளவு நோட்டுக்கள் மாற்றப்பட்டன
காங்கிரஸ், திராவிட அமைதியை பார்த்தால், புதிய வழி கண்டுபிடித்துள்ளனர் போல் தெரிகிறது.
"Mute Spectator "....