ADVERTISEMENT
சென்னை: திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க, அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று(மே 22) சென்னையில் சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது. பேரணி முடிவில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று(மே 22) கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, மனு அளிக்க முடிவானது.
அப்போது கவர்னரை சந்தித்து, அ.தி.மு.க.,வின் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். இந்த பேரணியில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
சென்னை சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை வரை அதிமுகவினர் சாலையின் நடுவே குவிந்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று(மே 22) கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று, மனு அளிக்க முடிவானது.
அதன்படி, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் இன்று(மே 22) சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் இருந்து அடையாறு, சர்தார் படேல் சாலை, கிண்டி வழியாக ஊர்வலமாக கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
சென்னை சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை வரை அதிமுகவினர் சாலையின் நடுவே குவிந்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து (8)
போராட்டம் செய்யதாம்.....
சென்னையில் இந்த ஊர்வலத்தால் நம் தமிழ் தொப்புள் கொடி உறவுகள் கொத்து கொத்தா மயங்கி விழுந்துகொண்டு இருக்கிறார்கள் இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகளும் அடக்கம் , கொத்து கொத்தா இலங்கையில் நடந்ததை அப்படியே சென்னையில் நிகழ்த்திக்காட்டியுள்ளார் அதிமுகவினர்
இவர்களுக்கு என்ன தெரியும் கூழை கும்பிடு மற்றும் காலில் விழுவது
ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்- பொதுமக்கள் அஞ்சலி இன்றக்கு தான் இவர் ஊர்வலம் போகிறாரா என்ன
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்த காலத்தில் நல்ல கட்சியை கண்டுபிடிப்பதே கஷ்டம்..அரசியல் கட்சி என்றாலே ஊழல் இருக்கும்.இது மாற்றமுடியாத உண்மை..