ADVERTISEMENT
தர்மபுரி: அதிமுக மாஜி அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மற்றும் மகன்கள் உள்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கே.பி.அன்பழகன் மீது இன்று(மே 22) தர்மபுரி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து (2)
கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல். மிக விரைவு. முப்பதாயிரம் சுருட்டுவதற்கு இருந்த விரைவு வழக்கு ஜோடிப்பதில் இல்லையே?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
லஞ்ச ஒழிப்பு போலீசின் வேகமே தனிதான், ஒரு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவே ஒரு வருடம் , அதுவும் நீதிமன்றம் ஆணையிட்டும், விரைவாக தாக்கல் செய்ய சொல்லியும் நல்ல போலீஸ் . அடுத்து நீதிமன்றம் அதை அப்படியே வாங்கி முடிந்தவரை வாய்தா தராமல் இனியாவது விரைந்து முடித்தாள் நல்லது. இல்லையேல் காவல் துறையும் நீதி துறையும் செய்யும் மெத்தன போக்கால் குற்றங்கள் அதிகரிப்பு என்பது உண்மையாகிவிடும்.