"டோக் பிசின் மொழியில் திருக்குறள்": பப்புவா நியூகினியாவில் வெளியிட்ட பிரதமர் மோடி
போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார்.

பிரதமர் மோடி, தன் ஜப்பான் பயணத்தை முடித்து விட்டு, நேற்று இரவு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். . அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரோப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி வரவேற்றார். பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.
இது குறித்து, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்.

குறளை டோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண கவர்னர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். கவர்னர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடிக்கு, பிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கி கவுரவித்தார். இது குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இந்தியாவுக்கான மிகப் பெரிய கவுரவம்.
பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, பிஜி நாட்டின் உயரிய விருதான 'கம்பானியன் ஆப் ஆர்டர் ஆப் பிஜி' என்ற விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி பிஜி நாட்டுப் பிரதமர் கவுரவித்திருக்கிறார் எனக் கூறியுள்ளது.
வாசகர் கருத்து (17)
திருக்குறள் என்றால் என்ன? திருக்குரல் தானே நம்முடைய தலைவரின் குரல் -
thirukkural
தனக்கே புரியாத மொழியில் பேசும் திறன் மாண்புமிகு துண்டுசீட்டுக்கு மட்டுமே உண்டு😁.
ஒருவேளை தமிழக முதல்வர் அங்கு சென்றிருந்தால் அவர் தந்தையின் (கருணாநிதி) புத்தகங்களை அந்த மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பார். கூடவே பப்புவா நியூ கினியா முழுக்க கலைஞருக்கு சிலை, மேலும் அங்கு இருக்கும் கடற்கரையில் அந்த பேனாவுக்கு சிலை வைத்திருப்பர் - ஆம் எல்லாம், தமிழக மக்கள் வரிப்பணத்தில்...
பப்புவா கினியா என்ற பெயர் கொண்ட நாடு???அப்படி என்றால் பப்புவா???கினியா???கினியா யாரென்று தெரியவில்லை